தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Kushbu Latest Interview About Aranmanai 4 Audio Launch

Kushbu Latest speech: ‘அவரு கூட 30 வருஷமா வாழுறேன்.. என் குழந்தைகளுக்கு அந்த ஜானர்..’ - மேடையில் நெகிழ்ந்த குஷ்பு!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 31, 2024 07:13 PM IST

எங்கள் வீட்டுப் பிள்ளை ஹிப்ஹாப் ஆதி அட்டகாசமாக இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் சூப்பரான விஷுவல்ஸ் தந்துள்ளார். எல்லோருக்கும் என் நன்றிகள்.

குஷ்பு பேச்சு!
குஷ்பு பேச்சு!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிகழ்வினில் பேசிய குஷ்பு , “ இப்படத்தின் நான்கு பாகங்கள் வெற்றிகரமாகப் போக முக்கிய காரணம் சுந்தர் சி தான். அவருடன் 30 வருடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொரு படத்திலும் எப்படி வித்தியாசமாக ரசிகர்களை மகிழ்விக்கலாம் என எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பார். 

வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளும், ஹாரர் திரைப்படங்களுக்கு ஃபேன். எனவே தான் அவரும் இந்த ஜானரில் தொடர்ந்து படமெடுக்கிறார். அரண்மனை படத்தை சோறு கட்டிக்கொண்டு வந்து திரையரங்கில் குடும்பத்தோடு ரசிக்கும் ரசிகர்கள் தான் இந்த வெற்றிக்கு காரணம். அவர்களுக்கு நன்றி. 

மேலும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் Benz Media  A.C.S அருண்குமார் சார், இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் ஒன்றாக இருக்க முடியாது என சொல்வார்கள். 

ஆனால் இந்த படத்தில் தமன்னா, ராஷிக்கண்ணா அவ்வளவு ஒத்துழைப்பு தந்தார்கள். கோவை சரளா மேம் மற்றும் நடித்த அனைவருக்கும் என் நன்றி. 

எங்கள் வீட்டுப் பிள்ளை ஹிப்ஹாப் ஆதி அட்டகாசமாக இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் சூப்பரான விஷுவல்ஸ் தந்துள்ளார். எல்லோருக்கும் என் நன்றிகள். அரண்மனை 3 பாகங்களை விட இப்படம் இன்னும் அட்டகாசமாக இருக்கும். இறுதியாக எங்கள் மகிழ்ச்சிக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் என் கணவர் சுந்தர் சிக்கு நன்றி” என்று பேசினார். 

இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது, “ எல்லோருக்கும் வணக்கம். இப்போது அரண்மனை நான்காம் பாகத்துடன் வந்துள்ளேன், முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிஸாக மாறும் என நினைக்கவே இல்லை. 

அரண்மனை 3 படத்திற்கு கிடைத்த வெற்றி தான், இப்படம் உருவாக காரணம். எப்போதும் நான் பணத்திற்காக இந்தப்படத்தைச் செய்யலாம் என நான் நினைத்ததே இல்லை. ஒரு நல்ல கதை, ஐடியா கிடைத்ததால் மட்டுமே இந்தப்படத்தைத் துவக்கியுள்ளேன். 

இப்படத்திற்கும் பின் ஒரு அட்டகாசமான ஐடியா கிடைத்தது. நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள், வட இந்தியாவைப் பிடித்த அளவு, அஸ்ஸாம் பக்கம் பிரம்மபுத்திராவை தாண்டிப் போகவில்லை. அது ஏன் எனக் கேட்டு ஆராய்ந்தால், பாக் எனும் ஆவிகளின் சக்தி பற்றிய சுவாரஸ்யமான விஷயம் சிக்கியது. அதை வைத்து, மிக சுவாரஸ்யமான கதையை அரண்மனை 4 இல் செய்துள்ளோம். 

நான் வேறொரு படத்தில் வேலை செய்த போது இந்த ஐடியா கிடைத்தது. இதில் வேலை பார்க்கலாமா? எனத் தயங்கினேன். அந்த நேரத்தில் ஒரு பயணம் மேற்கொள்கையில் ஒரு சின்ன பெண், என்னிடம் அங்கிள் அரண்மனை 4 எப்போது வருமென்றார் ?, அந்தப்பெண் என் தயக்கத்தை போக்கிவிட்டார். உடனே இந்த படம் ஆரம்பித்து விட்டேன். 

என் தயாரிப்பாளர்கள் கதையே கேட்கவில்லை. முழு ஆதரவு தந்தார்கள். அரண்மனை முதல் மூன்று படங்களை விட இப்படத்தில் எல்லாமே பிரமாண்டமாக இருக்கும். இப்படத்தில் இரண்டு ஹீரோயின், ஒரு ஹீரோயின் ஒரே நேரத்தில் அவரைப் பார்த்தால் பயமாகவும் இருக்கணும், பரிதாபமும் வரணும், குழந்தைக்கு அம்மாவாக வரணும்.. ஆகையால் யாரை அணுகுவது என்று நினைத்தேன். 

ஆனால் தமன்னா கேட்டவுடன் ஒத்துக்கொண்டார். அட்டகாசமாக நடித்துள்ளார். அவர் கேரியரில் இப்படம், அவரது வித்தியாசமான முகத்தைக் காட்டும். இப்படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். ராஷிக்கண்ணா எனக்கு மிகவும் செளகரியமான ஆர்டிஸ்ட். என்னை முழுமையாக நம்புவார். 

இப்படத்தில் நன்றாக நடித்துள்ளார். அரண்மனை படத்தில் காமெடி முக்கியம். என் படத்திற்கு ரசிகர்கள் வரக்காரணம் காமெடி தான். அதை நிறைவேற்றணும். 

பேப்பரில் நாங்கள் எழுதுவது பாதி தான், ஆர்டிஸ்ட் தான் அதை முழுதாக மாற்ற வேண்டும். அந்த வகையில் யோகி பாபு, சரளா மேடம், VTV கணேஷ், சிங்கம் புலி எல்லோரும் கலக்கியுள்ளார்கள். மொத்தத்தில் அரண்மனை 4 மனதிற்கு மிகப்பிடித்த படமாக வந்துள்ளது. பின்னணி இசையில் வழக்கமான பேய் படம் போல இல்லாமல் வித்தியாசமாக இசையமைத்து இருக்கிறார் ஆதி. எனக்கு எப்போதும் சப்போர்ட்டாக இருக்கும் என் மனைவிக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் ஏப்ரலில் வருகிறது ஆதரவு தாருங்கள் நன்றி.” என்று பேசினார். 

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்