தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kushboo: ‘ஹேமா மாலினி கொடுத்த வாய்ப்பு.. ஒரே ஐஸ்கிரீமில் சினிமா என்ட்ரி..’ - குஷ்பு சினிமாவில் நுழைந்த கதை!

Kushboo: ‘ஹேமா மாலினி கொடுத்த வாய்ப்பு.. ஒரே ஐஸ்கிரீமில் சினிமா என்ட்ரி..’ - குஷ்பு சினிமாவில் நுழைந்த கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 13, 2024 06:00 AM IST

Kushboo: “அந்த கேரக்டரில் நான் சரியாகப் பொருந்துவேன் என்று அவர் நினைத்திருக்கிறார். இதனையடுத்து அவர் என்னிடம் கேட்க, தகவல் அம்மாவிற்கு சென்றது.இதனைதொடர்ந்து அம்மா என்னிடம் கேட்டார்.” - குஷ்பு சினிமாவில் நுழைந்த கதை!

Kushboo: ‘ஹேமா மாலினி கொடுத்த வாய்ப்பு.. ஒரே ஐஸ்கிரீமில் சினிமா என்ட்ரி..’  - குஷ்பு சினிமாவில் நுழைந்த கதை!
Kushboo: ‘ஹேமா மாலினி கொடுத்த வாய்ப்பு.. ஒரே ஐஸ்கிரீமில் சினிமா என்ட்ரி..’ - குஷ்பு சினிமாவில் நுழைந்த கதை!

நடிகை குஷ்பு சினிமாவில் நுழைந்த கதை குறித்து சன் நியூஸ் சேனலுக்கு முன்னதாக பேசி இருந்தார்.

குஷ்பு சினிமாவில் நுழைந்த கதை!

அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “நான் சினிமாவில் வருவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, என்னுடைய அண்ணன் பிரபல நடிகை ஹேமா மாலினி அவர்களின் உறவினர்களோடு நண்பராக இருந்தான்.அதனால் அவன் அடிக்கடி ஹேமா மாலினி அவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுடன் விளையாடுவான்.

சிறுவயதில் ஹேமா மாலினி அவர்களை பற்றி கேள்விப்பட்ட பிறகு அவரது வீடு எப்படி இருக்கும் என்பது குறித்தான ஆவல், இயல்பாகவே எனக்குள் வந்தது. இதனையடுத்து அண்ணன் ஹேமா மாலினி அவர்களின் வீட்டுக்கு செல்லும்பொழுது, நானும் உடன் சென்றேன். நான் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பொழுது, ரவி சோப்ரா சார் என்னை பார்த்தார். அவர் அப்போது பர்னிங் ட்ரெயின் என்ற திரைப்படத்தை எடுப்பதற்கான வேலைகளில் இருந்தார். அந்தப்படத்தில், எட்டு வயது மதிக்கத்தக்க குழந்தை கேரக்டர் ஒன்று இருந்தது. அந்த கேரக்டரில் அவர் என்னை நடிக்க வைக்க ஆசைப்பட்டார். 

அம்மா என்னிடம் கேட்டார். அப்போது எனக்கும் எட்டு வயது தான்.

காரணம், அந்த கேரக்டரில் நான் சரியாகப் பொருந்துவேன் என்று அவர் நினைத்திருக்கிறார். இதனையடுத்து அவர் என்னிடம் கேட்க, தகவல் அம்மாவிற்கு சென்றது. இதனையடுத்து அவர் அம்மாவிடம் பேசினார். அதனைதொடர்ந்து அம்மா என்னிடம் கேட்டார். அப்போது எனக்கும் எட்டு வயது தான். இதையடுத்து நான் ரவி சோப்ரா சாரிடம், ஒரு நாளைக்கு தினமும் எனக்கு ஒரு ஐஸ்கிரீம் கொடுப்பீர்கள் என்றால், நான் படத்தில் நடிக்கிறேன் என்று கூறினேன். ஏனென்றால் எனக்கு ஐஸ்கிரீம் என்றால், அந்த சமயத்தில் மிகவும் உயிர். இதைக் கேட்டு சிரித்த ரவி சார் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தால் நீ நடிப்பாயா என்று கேட்டார். அதற்கு நான் நடிப்பேன் என்று சொன்னேன். 

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனாலும், அவருக்கு நான் ஒரு நிபந்தனையை வைத்தேன். அது என்னவென்றால்,பள்ளி நேரத்தில் நான் நடிக்க வர மாட்டேன் அதேபோல தேர்வு காலத்திலும் நான் நடிக்க வர மாட்டேன். மீதி நேரத்தில் நிச்சயமாக நடித்துக் கொடுக்கிறேன் என்று அவரிடம் கூறினேன். அவரும் ஓகே என்று சொல்லிவிட்டார். என்னவென்று தெரியவில்லை, அப்போதே எனக்குள்ளாக படிப்பை மட்டும் கண்டிப்பாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருந்தது. இதையடுத்து தான் நான் அப்படி ஒரு முடிவை அந்த சமயத்தில் எடுத்தேன்.அப்படித்தான் நான் சினிமாவிற்குள் நுழைந்தேன்.” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: