Kushboo: கிளாமர் பெயரை உடைத்து தூக்கி போட்ட படம்.. குஷ்பு சினிமாவில் ஜொலிக்க வைத்தது எப்படி?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kushboo: கிளாமர் பெயரை உடைத்து தூக்கி போட்ட படம்.. குஷ்பு சினிமாவில் ஜொலிக்க வைத்தது எப்படி?

Kushboo: கிளாமர் பெயரை உடைத்து தூக்கி போட்ட படம்.. குஷ்பு சினிமாவில் ஜொலிக்க வைத்தது எப்படி?

Aarthi Balaji HT Tamil
Jun 01, 2024 07:04 AM IST

Kushboo: சின்ன தம்பி பற்றி குஷ்பு கூறிய வார்த்தைகள் கவனம் பெறுகிறது. இன்றும் சினிமாவில் பிரபல நட்சத்திரமாக நிலைத்து நிற்கிறேன் என்றால் அது சின்ன தம்பி தான் என்றும், 16 வயதினிலே படத்தில் நடிக்கும் போது இந்த படத்திற்கான வாய்ப்பு வந்ததாகவும் குஷ்பு கூறுகிறார்.

கிளாமர் பெயரை உடைத்து தூக்கி போட்ட படம்.. குஷ்பு சினிமாவில் ஜொலிக்க வைத்தது எப்படி?
கிளாமர் பெயரை உடைத்து தூக்கி போட்ட படம்.. குஷ்பு சினிமாவில் ஜொலிக்க வைத்தது எப்படி?

ஒரு காலத்தில் கிளாமர் வேடங்களில் ஜொலித்த குஷ்புவுக்கு குணச்சித்திர கதாபாத்திரம் என்று பெயர் வர காரணமாக அமைந்த படம் என்றால் அது, சின்ன தம்பி படம் மூலமாக தான். குஷ்புவும், பிரபுவும் முதன் முறையாக இணைந்து நடித்த படம் இது. 

இதற்கிடையில் இருவரும் காதலித்து வந்தார்கள் என சொல்லப்பட்டது. மனைவி மற்றும் குழந்தைகளை கொண்ட பிரபு குஷ்புவை காதலிப்பதாக சொன்னது அந்த நேரத்தில் பெரும் விவாதங்களுக்கு வழி வகுத்தது.

சின்ன தம்பி வாய்ப்பு

தற்போது சின்ன தம்பி பற்றி குஷ்பு கூறிய வார்த்தைகள் கவனம் பெறுகிறது. இன்றும் சினிமாவில் பிரபல நட்சத்திரமாக நிலைத்து நிற்கிறேன் என்றால் அது சின்ன தம்பி தான் என்றும், 16 வயதினிலே படத்தில் நடிக்கும் போது இந்த படத்திற்கான வாய்ப்பு வந்ததாகவும் குஷ்பு கூறுகிறார்.

சின்ன தம்பி தனக்கு மிகவும் பிடித்த படம் என்று குஷ்பு கூறி வந்தார். இன்றும் தன்னால் சினிமாவில் நிலைத்து நிற்க சின்ன தம்பி தான் காரணம். அவருக்கு திரையுலகில் இவ்வளவு பெரிய பெயர் கிடைத்ததற்கு இந்தப் படம் தான் காரணம்.

ஒரு வருடம் ஓடி சாதனை

பி. வாசு இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான சின்ன தம்பி. பிரபு, குஷ்பு முக்கிய வேடங்களில் நடித்த இப்படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சின்ன தம்பியும் ஒரு வருடம் தமிழகத்தில் திரையரங்குகளில் ஓடிய படம். படம் ஹிட் ஆன பிறகு, தமிழகத்தில் வழிபாடு செய்ததால் கோயில் கட்டினேன் என்று நடிகை கூறினார்.

சின்ன தம்பி பட கதை

நந்தினி ( குஷ்பு ) என்ற பணக்காரப் பெண்ணைச் சுற்றிச் சுற்றி வருகிறது. இருப்பினும், ஒரு ஜோதிடர் அவள் விரும்பிய ஒருவரை திருமணம் செய்து கொள்வார் என்று கணித்த பிறகு, அவளுடைய சகோதரர்கள் அவளை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்க முயற்சி செய்கிறார்கள். 

ஒரு சாமானியரான சின்ன தம்பி ( பிரபு ) உடனான அவரது உறவு அவளை சிக்கலில் தள்ளுகிறது. தன் விருப்பப்படி வாழ்க்கையை நடத்த தன் சகோதரர்களை அவள் எப்படி சமாதானப்படுத்துகிறாள் என்பது கதையின் மீதியை உருவாக்குகிறது.

33 வருடம்

சமீபத்தில் தான் சின்ன தம்பி படம் வந்து 33 ஆண்டுகள் நிறைவு செய்து இருந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.