தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Kushboo Latest Interview About Sexual Abuse By Her Father Body Discrimination Husband Sundar C Daughters

Kushboo: ‘வக்ர புத்தியோட இருக்குற ஆண்கள்.. அப்பா பற்றி அக்கறையே இல்ல..’ - குஷ்பு பளார்!

Mar 01, 2024 08:25 AM IST Kalyani Pandiyan S
Mar 01, 2024 08:25 AM , IST

எதிர்மறையான விஷயங்களும் அதிகப்படியான பாசிட்டிவான விஷயங்களோடு தான் வரும். இன்றும் பெண்ணை வக்ர புத்தியோடு பார்க்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். - குஷ்பு!

தனது தந்தை தனக்கு இழைத்த பாலியல் துன்புறுத்தலை காலம் கடந்து வெளிக்கொண்டு வந்ததற்கான காரணத்தை நடிகை குஷ்பு அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.   இது குறித்து அவர் பேசும் போது, “எல்லோருக்குமே வாழ்க்கையில் பிரச்சினைகள் என்பது இருக்கும். எல்லோருமே அந்த காலகட்டத்தை கடந்து தான் வந்திருப்பார்கள். குறிப்பாக பெண்கள், ஆண்கள் ஆகிய இருவருக்கும் கொடுக்கப்பட வேண்டிய சம அளவு உரிமையானது எப்பொழுதும் மறுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அப்போது, ஒரு பெண் தனியாக என்ன செய்து விட முடியும் என்ற மனநிலை என்னுடைய அப்பாவுக்கே இருந்தது. அவர் என்னிடம் உன்னால் தனியாக என்ன சாதித்து விட முடியும் என்று கேட்டார்.    

(1 / 5)

ஆனால் எல்லா எதிர்மறையான விஷயங்களும் அதிகப்படியான பாசிட்டிவான விஷயங்களோடு தான் வரும். இன்றும் பெண்ணை வக்ர புத்தியோடு பார்க்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அவர்களுடைய மிகப்பெரிய ஆயுதமே பெண்களை இழிவாக பேசுவது தான். அதன் வழியாகதான் தான் ஒரு ஆண்மகன் என்பதை நிரூபிக்க முடியும் என்று கருதுகிறார்கள். அது எவ்வளவு கேவலமான புத்தி என்பது அவர்களுக்கு புரிய மறுக்கிறது.    

(2 / 5)

ஆனால் இப்போது ஒருவர் நம்மை கேவலமாக பேசினால், நமக்கு ஆதரவாக 100 பேர் வருகிறார்கள். ஆகையால், காலம் கண்டிப்பாக மாறி இருக்கிறது. நாம் ஏன் நம்மை பற்றி கேவலமாக பேசியவரை பற்றி நினைக்க வேண்டும். நமக்கு ஆதரவாக நின்ற 100 பேர் பற்றி நினைக்கலாமே. இப்படி நமக்கு நேரும் எதிர்மறையான எல்லா விஷயங்களிலும் பாசிட்டிவான பக்கத்தை பார்க்கும் பொழுது, நமக்குள் மகிழ்ச்சியானது எப்போதுமே குடி கொண்டிருக்கும்.  

(3 / 5)

ஒரு தந்தையானவர் நமக்கு முன்மாதிரியாக இருப்பது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. 16 வயதிலிருந்து நான் என்னுடைய தந்தையுடன் நெருக்கமாக இருந்ததில்லை. அதன் பின்னர் நான் என்னுடைய தந்தையை பார்க்கவே இல்லை. அவர் தற்போது இருக்கிறாரா இல்லையா என்பது கூட எனக்கு தெரியவில்லை. அதைப்பற்றி நான் பெரிதாக அக்கறை எடுத்துக் கொண்டதும் கிடையாது. என்னுடைய அப்பா என்னிடம் தவறாக நடந்து கொண்டது என்னுடைய இதயத்தின் ஓரத்தில் எங்கேயோ இருந்து கொண்டே இருந்திருக்கிறது.   

(4 / 5)

தினமும் காலையில் எழும்பொழுது அது எனக்குத் தோன்றும். அந்த பாரமானது எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. அதை நான் என் மனதிற்குள்ளேயே  வைத்து சுமந்து கொண்டே இருந்தேன்.  நான் இப்போது தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருக்கிறேன். நான் இப்போதும் பெண்களிடம் சொல்வது என்னவென்றால், உங்களுக்கு ஒரு தவறு நடந்தால், அதை அப்போதே வெளிப்படுத்துங்கள்.  நான் இத்தனை வருடங்கள் கழித்து அந்த விஷயத்தை பேசி இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அவர் என்னுடைய அப்பா என்பதும்,  நான் அதை வெளியே சொன்ன பிறகு என்னுடைய குடும்பம் என்ன ஆகும் என்ற நினைப்பும்தான்.அதை வெளியே சொன்னதற்குப் பிறகு நான் மிகவும் இலகுவாக உணர்கிறேன். அதை நான் இப்போது சொன்னதற்கு காரணம், என்னை பார்த்து இன்னும் சில பெண்கள் முன்வந்து அது போன்று அவர்களுக்கு நடந்ததை சொல்வார்கள் என்பதே! உங்களது வீட்டிற்குள்ளேயே இதுபோன்று உங்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து இருக்கும். கிட்டத்தட்ட 95 சதவீதம் அது அப்படிதான் இருக்கும். இதில் 5 சதவீதம் மட்டும் தான் வெளி நபர்கள் இருப்பார்கள். நீங்கள் அதைப்பற்றி வெளியே பேச வேண்டும்.” என்று பேசினார். 

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்