Kurangu Pedal: 'டயர் ஓட்டுதல், நீச்சல், சிலம்பம்': 90ஸ் கிட்ஸ் ஆடிய விளையாட்டுக்களின் குவியல் 'குரங்குபெடல்’ ட்ரெய்லர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kurangu Pedal: 'டயர் ஓட்டுதல், நீச்சல், சிலம்பம்': 90ஸ் கிட்ஸ் ஆடிய விளையாட்டுக்களின் குவியல் 'குரங்குபெடல்’ ட்ரெய்லர்!

Kurangu Pedal: 'டயர் ஓட்டுதல், நீச்சல், சிலம்பம்': 90ஸ் கிட்ஸ் ஆடிய விளையாட்டுக்களின் குவியல் 'குரங்குபெடல்’ ட்ரெய்லர்!

Marimuthu M HT Tamil Published Apr 30, 2024 03:35 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 30, 2024 03:35 PM IST

Kurangu Pedal Official Trailer: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’குரங்கு பெடல்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் பலரையும் ஈர்த்துள்ளது.

குரங்கு பெடல்
குரங்கு பெடல்

தமிழ்நாட்டில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் முக்கிய நடிகராக வளர்ந்து வருபவர், சிவகார்த்திகேயன். இவர் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத்தொடங்கி, பல்வேறு கதையம்சம் கொண்ட படங்களையும், ஜனரஞ்சகமான படங்களையும் தயாரித்து வருகிறார்.

அதன்பேரில் தனது நண்பரான அருண்ராஜா காமராஜின் முதல் படமான ’கனா’வை முதன்முதலில் தயாரித்தார். பின்னர், பிளாக்‌ஷிப் யூட்யூப் சேனல் பங்குதாரரான கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா’, அருண் பிரபுவின் இயக்கத்தில் ‘வாழ்’ மற்றும் நெல்சன் திலீப் குமார் இயக்கிய ‘டாக்டர்’ என்னும் படத்தினை தயாரித்தும் நடித்தும் தனது பணியை செவ்வென செய்து முடித்தார். இறுதியாக சிபிசக்கரவர்த்தியின் இயக்கத்தில் இவர் நடித்த ‘டான்’ திரைப்படம், ரூ.100 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்தது.

இந்நிலையில் தான் வெகுநாட்களுக்குப் பின்,தன் பேனரில் மதுபானக் கடை என்னும் பெயரில் படம் எடுத்து கவனம் ஈர்த்த, கமலக்கண்ணன் இயக்கும் புதிய படத்தைத் தயாரித்து வந்தார். சமீபத்தில் அப்படத்தின் பெயர் ‘குரங்கு பெடல்’ என அறிவிக்கப்பட்டது.

குரங்கு பெடல் படம் எதைப்பற்றி பேச இருக்கிறது?

ஒரு தந்தைக்கும் அவரது பதின்ம வயதை அடைய தயார்நிலையில் இருக்கும் மாரிக்கும் இடையே நடக்கும் சண்டைகளைப் பற்றியது கதை எனச் சொல்கின்றனர். சைக்கிள் ஓட்டத்தெரியாத தந்தையைப் பெற்ற மகனுக்கு, சைக்கிள் ஓட்டி கற்றுக்கொள்ள ஆசை வருகிறது. அந்த ஆசையைத் தூண்டும் விதமாக, அங்கு ஒரு வாடகை சைக்கிள் கடையும் வருகிறது. வாடகைக்கு சைக்கிள் ஓட்ட தனது தந்தையிடம் பணம் கேட்டால் அதற்கு அவர் பணம் தரமறுக்கிறார். பின் தாயிடம், யாருக்கும் தெரியாமல் பணம் பெற்று சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஓட்டிப்பழகுகிறார். அப்போது நடக்கும் கூத்துகள் தான்,படத்தின் கதை என கோவா ஃபிலிம்பெஸ்டிவலில் திரையிடப்பட்டபோது, விவரிக்கப்பட்டது.

குரங்கு பெடல் ட்ரெய்லர் எப்படி இருக்கிறது?: இந்நிலையில் குரங்கு படல் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலரையும் ஈர்க்கிறது. அந்த ட்ரெய்லரின் ஓப்பனிங்கில், விளையாட்டு உடல் நலத்தைக் காக்கும், விளையாட்டு கொண்டாட்டத்தைத் தரும், விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது, விளையாட்டு பீரியடை கணக்கு பீரியடாக மாற்றித்தருவது ஒரு மனிதத்தன்மையற்ற செயல் என மது மற்றும் புகை பற்றி ஒளிபரப்பப்படும் விழிப்புணர்வு வாசகங்களை இமிடேட் செய்வது, கவனம் ஈர்க்கிறது.

அதன்பின் பள்ளி செல்லும் 90களில் கிராமங்களில் பிறந்த குழந்தைகளுக்கு நடக்கும் விஷயங்களை நினைவுகூரும் வகையில், அந்த சூழலில் கதை நகர்கிறது.

விடுமுறைக்குத் தயார் ஆகிக்கொண்டிருக்கும் ஐந்து சிறுவர்கள், பரீட்சைக்குப் பின், மே மாத விடுமுறையினை எவ்வாறு கொண்டாடலாம் எனப் பேசிக்கொள்கின்றனர். அதில் ஒருவர் விடுமுறையில் யார் ஊராட்சிகோட்டை மலையில் முதலில் ஏறுவது என்பது பற்றி, சக நண்பரிடம் கேட்கிறார். அதுக்கு இன்னொரு சிறுவன் அதில் எரிமலை இருப்பதால், தான் அங்கு வரமாட்டேன் எனத் தெரிவிக்கிறார். பின் விடுப்புக்கு முன் ஆசிரியர் ஒருவர், இந்த லீவில் வீட்டோட இருக்கணும் என மாணவர்களை அறிவுறுத்துகிறார். பின் வெளியில் வரும் அந்த மாணவ சிறுவர்கள், இந்த லீவில் ராத்திரி தூங்குவதற்கு மட்டும் தான் வீட்டுக்குப் போகணும் என முடிவு எடுக்கின்றனர். அங்கிருந்து விளையாட்டுக்கள் தொடங்குகிறது.

டயர் ஓட்டுதல், ஐஸ்கிரீம் சாப்பிடுதல், முடிவெட்டுதல், சிலம்பம் சுழற்றுதல், குண்டு விடுதல், நீச்சல் அடித்தல் போன்ற விடுப்புகால சங்கதிகள் அரங்கேறுகின்றன. பின், நடராஜா சர்வீஸ் எனப்படும் சைக்கிள் ஓட்டத்தெரியாத தந்தையைப் பெற்ற மாரிக்கு சைக்கிள் ஓட்டும் ஆசை வருகிறது. அதற்காக, தெரிந்தவர்களின் சைக்கிளில் குரங்கு பெடல் போடுகிறார். கீழே விழுகிறார். இதில் அந்த சிறுவர்களுமே விடுமுறையில் சைக்கிள் ஓட்ட முடிவு எடுக்கின்றனர். அதில் மாரிக்கும் இன்னொரு சிறுவனுக்கும் யார் முதலில் சைக்கிள் ஓட்டிப் பழகுவது என போட்டியே வருகிறது. இதனால் சின்ன சின்ன திருட்டுவேலைகள் செய்து பணம்பெறுவது, அம்மாவின் சிறுவாட்டுக்காசில் பணம் வாங்குவது என செய்யும் சிறுவன் மாரி, இறுதியில் என்ன ஆகிறான் என்பதே கதைபோல. ட்ரெய்லரை மிகவும் ஈர்க்கும் வகையில் இருக்கிறது.

இப்படத்தில் சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர்.ராகவன், குணசேகர்,ரதீஷ், சாய் கணேஷ், காளி வெங்கட், பிரசன்ன பாலச்சந்தர், ஜென்சன் திவாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்குண்டான இசையினை ஜிப்ரான் வைபோதா செய்துள்ளார். ஒளிப்பதிவினை சு.மி. பாஸ்கரனும், வசனத்தை ஜி. பாலாஜியும் செய்துள்ளனர். இப்படம் வரக்கூடிய மே.3ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகிறது. இது முழுக்க முழுக்க 90களில் பிறந்த குழந்தைகளின் கதைபோல் இருப்பதால், பலரையும் ஈர்க்கும் என ட்ரெய்லரை பார்த்தவர்கள் கமெண்ட் இட்டு வருகின்றனர்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.