Kumbhmela Monolisa: கண்களால் கைது செய்த கும்பமேளா அழகி மோனாலிசாவை தேடி வந்த பாலிவுட் வாய்ப்பு
Kumbhmela Monolisa: கும்பமேளா நிகழ்வுக்காக ஊசி, பாசி மற்றும் ருத்ராட்சை மாலை விற்க வந்த இந்தூரை சேர்ந்த மோனாலிசா தனது கண்களாலும், டஸ்கி அழகாலும் அனைவரையும் கொள்ளை கொண்டு இணையத்தில் வைரலானார். தற்போது அவரை தேடி பாலிவுட் பட வாய்ப்பும் வந்துள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா நிகழ்வு, இந்த ஆண்டில் உத்தரபிரதேசம் மாநிலம் பிராயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த 12ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உலகின் பெரிய ஆன்மிக சங்கமமாக கருதப்படும் இந்த நிகழ்வில் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் மகா கும்பமேளாவில் புனித நீராட வருகை புரிந்து வருகிறார்கள்.
ஆன்மீகத்தை கடந்து தற்போது நடைபெற்று வரும் கும்பமேளாவில் அனைவரையும் கவர்ந்த விஷயமாக மோனாலிசா என்ற இளம் பெண் இருந்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த இந்த பெண் ஊசி, பாசி மற்றும ருத்ராட்சை மாலை விற்பதற்காக கும்பமேளா நடக்கும் பகுதியில் வலம் வந்துள்ளார். பார்த்தவுடன் வசியம் செய்யும் கண்கள், மாநிறத்துடன் அழகு தோற்றம் என பார்ப்பவர்களை தனது அழகால் சொக்க வைத்த இவரது விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
மோனாலிசாவின் விடியோவை பார்த்த பலரும் அவரது அழகை வர்ணித்ததுடன், ஹார்ட் எமோஜிகளால் லைக்குகளை குவித்து ஷேரிங்கும் செய்தனர். பார்ப்பதற்கு பெண் துறவி போல காட்சியளித்த மோனலிசாவை, இணையவாசிகள் ’பிரவுன் பியூட்டி’ என அழைத்து வந்தனர்.
