Kumari Muthu: குமரி முத்து மகள் திருமணத்திற்கு உதவிய விவேக் .. புண்ணியவதின்னு கூப்பிட ஆள் இல்ல.. கண் கலங்கிய மனைவி!
Kumari Muthu: திருமணம் முடிந்த நாள் முதல் கடைசி வரை என்னை புண்ணியவதி.. புண்ணியவதி.. என்று தான் வாய் நிறைய கூப்பிடுவாங்க. என்னை அவர் அதிகம் வெளியே கூட்டிட்டு போறது லாம் கிடையாது. ஆனால் ஒரு முறை கலைஞர் ஐயா கூட போட்டோ எடுத்து கொள்ள கூப்பிட்டு போனார்.
Kumari Muthu: தமிழ் திரைப்பட உலகில் 1990 காலகட்டத்தில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் குமரிமுத்து. அந்த பெயரை சொல்லும் போதே அந்த குபீர் சிரிப்பு மனதில் வந்து விடும். அவர் பார்வையையும் அந்த வெடிச் சிரிப்பையும் எந்த காலத்திலும் நாம் மறக்க முடியாது. பதினைந்து வயதில் குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை கிளம்பி வந்து நாடகங்கள், திரைப்பட துறை என்று படிப்படியாக முன்னேறிய யதார்த்தமான நடிகர்.
எழுநூறு படங்களுக்கும் மேலான படங்களில் நடித்தவர். கலைஞர் கருணாநிதி தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து நட்சத்திர பேச்சாளராக அரசியல் மேடைகளில் கலக்கியவர். அவருடைய சுவாரஸ்யமான வாழ்க்கை குறித்தும் நினைவுகளையும் சில தினங்களுக்கு முன் அவரின் மனைவி புண்ணியவதி ரெட்நூல் என்ற யூடியூப் சேனலில் பகிர்ந்து உள்ளார். அப்போது அவர்
எந்த ஒரு நாடகமும் பார்த்ததும் இல்லை
திருமணம் முடிந்த நாள் முதல் கடைசி வரை என்னை புண்ணியவதி.. புண்ணியவதி.. என்று தான் வாய் நிறைய கூப்பிடுவாங்க. என்னை அவர் அதிகம் வெளியே கூட்டிட்டு போறது லாம் கிடையாது. ஆனால் ஒரு முறை கலைஞர் ஐயா கூட போட்டோ எடுத்து கொள்ள கூப்பிட்டு போனார். எங்கள் இருவரும் திருமணம் நடப்பதற்கு முன்பு பார்த்ததும் பேசியதும் இல்லை. ஃபோட்டோ மட்டுமே அம்மா காட்டினார்கள். ஓகே என்று சொல்லி ஏற்பாடு செய்த திருமணம் தான் எங்களுடையது. மதுராந்தகத்தில் திருமணம் நடந்த இடத்தில் தான் இருவரும் பார்த்து கொண்டோம் என வெட்கத்துடன் சொல்கிறார். திருமணமான போது நாடகங்களில் தான் நடித்து வந்தார். ஆனால் இவர் தன் கணவன் நடித்த எந்த ஒரு நாடகமும் பார்த்ததும் இல்லை என்று அதிர்ச்சி செய்தி தருகிறார்.
தொலைக்காட்சியில் அவர் படங்களை பார்த்திருக்கிறேன்
எப்போதாவது அவர் நடித்த படங்கள் திரைக்கு வருவதற்கு முன்னர் திரையிடப்படும் பிரிவியூ காட்சிகளுக்கு மட்டும் சில முறை அழைத்து போய் இருக்கிறார். மற்ற படி தொலைக்காட்சில தான் அவர் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன் என்று ஆதங்கமாக கூறுகிறார். நான் அவருடைய நடிப்பு குறித்து எப்போதும் கருத்து சொன்னதில்லை என்கிறார்.
அவரோடு சேர்ந்து பெரிதாக எங்கும் வெளியே போனதில்லையாம். காலமாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு மலேஷியா அழைத்து சென்றார். மற்ற படி என் உலகம் என்பது அவர் வீட்டை சுற்றி உள்ள கடைகள் தான். அவர் சினிமாவில் எப்படி நகைச்சுவை நடிகராக இருந்தாரோ அதே போல் தான் வீட்டில் கலகலப்பாக பேசுவார். பெண் குழந்தைகள்தான் அவருக்கு மிகவும் பிடிக்கும். கடைசி காலத்தில் மகள்கள் தான் நன்றாக கவனித்து கொள்வார்கள் என்று அடிக்கடி கூறுவார்.
அவர் மறைந்த பிறகு தனது கடைசி மகள் அவர் சொன்ன மாதிரியே தன்னை ராணி மாதிரி பார்த்துக் கொள்கிறார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார். அவருக்கு கருவாடு விரும்பி சாப்பிடுவாராம். நான் சமைத்தால் மட்டுமே சாப்பிடுவார் என்கிறார். இதன் காரணத்தை நெறியாளர் கேட்ட போது தனது மகள்கள் வேலை பார்த்து கஷ்டப் பட்டு விடக்கூடாது என்று நினைத்து கொண்டு என்னை சமைக்கச் சொல்லி இருப்பாரோ என்று அப்பாவித்தனமாக சொல்லும் பதிலில் அத்தனை பாசம் தெரிகிறது.
குமரி முத்துவின் அரசியல் பணி
குமரிமுத்து அவர்களின் அரசியல் வாழ்க்கை குறித்த கேள்விக்கு சிறு வயது முதலே கலைஞர் கருணாநிதி அவர்களின் எழுத்துருக்கள் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவருடன் இணைந்து கடைசி வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிப் பணியாற்றினார். அவர் வாய்ப்பு தேடி அலைந்து பணம் சம்பாதித்த போதிலும் பிறருக்கு உதவி செய்வார். இந்த ஒரு விசயத்தில் தான் அவ்வப்போது முறைத்து கொள்வாராம். தனது கடைசி மகள் திருமண செலவுகளுக்காக மறைந்த நடிகர் விவேக் உதவியதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்