Kudumbasthan On OTT: மிடில் கிளாஸ் பையனின் வாழ்க்கை.. ஓஹோ வரவேற்பு.. ‘குடும்பஸ்தன்’ ஓடிடி ரீலீஸ் எப்போது? - தகவல் இங்கே
Kudumbasthan On OTT: ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் எப்போது, எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Kudumbasthan On OTT: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மணிகண்டன் பார்க்கப்படுகிறார். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியான திரைப்படம் ‘குடும்பஸ்தன்’.
அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் மிடில் கிளாஸ் குடும்பத்தை நடத்தும் ஒரு சாமானியனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்டு இருந்தது. முழுக்க, முழுக்க காமெடியாக அணுகப்பட்ட இந்தத்திரைப்படம் மக்களிடம் வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
எப்போது வருகிறது?
இந்த நிலையில் இந்தப்படம் எப்போது ஓடிடிக்கு வருகிறது. எந்த தளத்தில் வெளியாகிறது உள்ளிட்ட விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி ‘குடும்பஸ்தன்’திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வருகிற பிப்ரவரி 28 -2025 அன்று வெளியாக இருப்பதாக தகவ்ல் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த தகவலை சம்பந்தப்பட்ட ஓடிடி தளம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
மணிகண்டன் பேட்டி
முன்னதாக, கோவையில் நடந்த குடும்பஸ்தன் ப்ரொமோஷன் நிகழ்வில் பங்கேற்ற மணிகண்டன், ‘குடும்பஸ்தன்’ அப்படிங்கிற படம், எல்லார் வீட்டிலும் நடக்கும் தினசரி சம்பவங்களின் தொகுப்பு தான், இந்தப் படம்.
எனக்கு இந்தப் படத்தின் கதையைச் சொன்னது பிடிச்சிருந்தது. இன்னிக்குத் தேதிக்கு ஒரு சாகச படம் எடுக்கணும்னு தான் அதை எழுதத் தொடங்கியிருக்காங்க. மலையில் ஏறுறது பத்தி எழுதலாமா, நடுக்கடலில் நீந்துறது பத்தி எழுதலாமா என யோசிக்கும்போது, இன்னிக்குத் தேதி குடும்பம் நடத்துறதை சாகசம்தான், அப்படின்னு புரிஞ்சுக்கிட்டு கதை எழுதியிருக்காங்க. அதனால் தான், இந்தப் படத்தை எடுத்துப் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்.
எனக்கு கொங்கு ஸ்லாங் வரல: மணிகண்டன்
என்கூட நடிச்சவங்க எல்லாம் ஒரு பத்து ஆண்டுகளாக நக்கலைட்ஸ் டீமில் பல வீடியோக்களில் ட்ரெயின் ஆகிட்டு இருந்திருக்காங்க. எனக்குதான் அவங்களோட வொர்க் பண்றப்ப, ஸ்லாங் வரல. அதற்காக பொறுமையாக எனக்கு விவரிச்சு, நல்லவிதமாக என்னை நடிக்க வைச்சாங்க. இது ஒரு டீம் எஃபர்ட் தான்.
இந்தப் படம் நாங்க நினைச்ச மாதிரி வந்தது பெரிய சந்தோஷம். நக்கலைட்ஸ் ஓனர் பிரசன்ன பாலச்சந்திரன் சாரை, அவரது நக்கலைட்ஸ் டீமில் வாழ்நாள் வழிகாட்டி மாதிரி பார்க்குறாங்க. உண்மையிலேயே பெரிய சுரங்கம் அவர். நிறைய உள்ள விசயங்களை உள்ளவைச்சுக்கிட்டு, அந்த நல்ல விஷயங்களைக் கொடுத்துட்டே இருக்கார்.
இந்தப் படம் பண்ணுனதில் நிறைய நல்ல விஷயம் நடந்துருக்கு என்றால், அதில் பிரசன்ன பாலச்சந்திரன் சாரின் பழக்கம் கிடைச்சதும் முக்கியமானது. ஜென்சன் மாதிரியான நிறைய நக்கலைட்ஸ் குழுவினரை பார்த்ததே மிகப்பெரிய சந்தோஷம்.’ என்று பேசினார்.
‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடித்திருந்தார். துணை கதாபாத்திரங்களில் குரு சோமசுந்தரம், இயக்குனர் சுந்தர்ராஜன், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், நிவேதிதா, முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைத்துள்ளார். சினிமாகாரன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்