Kudumbasthan Saanve: ‘ஸ்ரீதேவிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்..‘குடும்பஸ்தன்’ படத்துக்கு நீங்க கொடுத்த வரவேற்பு’- சான்வீ பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kudumbasthan Saanve: ‘ஸ்ரீதேவிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்..‘குடும்பஸ்தன்’ படத்துக்கு நீங்க கொடுத்த வரவேற்பு’- சான்வீ பேட்டி

Kudumbasthan Saanve: ‘ஸ்ரீதேவிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்..‘குடும்பஸ்தன்’ படத்துக்கு நீங்க கொடுத்த வரவேற்பு’- சான்வீ பேட்டி

Kalyani Pandiyan S HT Tamil
Published Feb 09, 2025 08:38 AM IST

Kudumbasthan Saanve: ‘குடும்பஸ்தன்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைப் பலரும் தங்களுடன் பொருத்திக் கொண்டார்கள். ரசிகர்கள் கொடுத்து வரும் பாராட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது -சான்வீ பேட்டி

Kudumbasthan Saanve: ‘ஸ்ரீதேவிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்..‘குடும்பஸ்தன்’ படத்துக்கு நீங்க கொடுத்த வரவேற்பு’- சான்வீ பேட்டி
Kudumbasthan Saanve: ‘ஸ்ரீதேவிதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்..‘குடும்பஸ்தன்’ படத்துக்கு நீங்க கொடுத்த வரவேற்பு’- சான்வீ பேட்டி

சான்வே
சான்வே

முழுக்க, முழுக்க காமெடியாக அணுகப்பட்ட இந்தத்திரைப்படம் மக்களிடம் வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடித்திருந்தார். வெண்ணிலா கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்தி இருந்த நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு

இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு எதிர்பாராத விதமாகதான் வந்திருக்கிறது. ஆம், சான்வே ஹைதராபாத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அவரிடம் ஏதோ ஒன்று சிறப்பாக இருப்பதை கணித்த நடிகை ஜெயசுதா,சான்வீக்கு முதல் வாய்ப்பை கொடுத்தார்.

அந்த தருணம்தான் சான்வேக்கு நடிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டி இருக்கிறது. அதன் பின்னர் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி, கடந்த ஏழு ஆண்டுகளில் ’பிட்ட காதலு’ (நெட்ஃபிளிக்ஸ்), ’புஷ்பக விமானம்’ மற்றும் ’பிரேம விமானம்’ ஆகிய படங்களின் மூலம் அவர் தனது சினிமா கரியரில் இந்த இடத்தை கொடுத்திருக்கிறது. இந்த வரிசையில், ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் அவருக்கு திருப்பு முனை படமாக அமைந்திருக்கிறது.

 

குடும்பஸ்தன்
குடும்பஸ்தன்

சான்வீ அடுத்தடுத்து ஆக்‌ஷன் ஸ்பை த்ரில்லர், தீவிரமான ஸ்போர்ட்ஸ் கதை, ரொமாண்டிக் காமெடி போன்ற வித்தியாசமான கதைத்தேர்விலும் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக சான்வே தெரிவித்து இருக்கிறார். காரணம் கேட்டால், இது போன்ற கதைகளில்தான் முழுமையான நடிப்புத் திறனை வெளிப்படுத்த முடியும் என்கிறார்.

மேலும் பேசிய அவர், ‘குடும்பஸ்தன்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைப் பலரும் தங்களுடன் பொருத்திக் கொண்டார்கள். ரசிகர்கள் கொடுத்து வரும் பாராட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற சான்வீ நடிகை ஸ்ரீதேவியே தனது இன்ஸ்பிரேஷன் என்றும் அவரை போல திரையில் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

மணிகண்டன் பேட்டி

முன்னதாக, கோவையில் நடந்த குடும்பஸ்தன் ப்ரொமோஷன் நிகழ்வில் பங்கேற்ற மணிகண்டன், ‘குடும்பஸ்தன்’ அப்படிங்கிற படம், எல்லார் வீட்டிலும் நடக்கும் தினசரி சம்பவங்களின் தொகுப்பு தான், இந்தப் படம்.

எனக்கு இந்தப் படத்தின் கதையைச் சொன்னது பிடிச்சிருந்தது. இன்னிக்குத் தேதிக்கு ஒரு சாகச படம் எடுக்கணும்னு தான் அதை எழுதத் தொடங்கியிருக்காங்க. மலையில் ஏறுறது பத்தி எழுதலாமா, நடுக்கடலில் நீந்துறது பத்தி எழுதலாமா என யோசிக்கும்போது, இன்னிக்குத் தேதி குடும்பம் நடத்துறதை சாகசம்தான், அப்படின்னு புரிஞ்சுக்கிட்டு கதை எழுதியிருக்காங்க. அதனால் தான், இந்தப் படத்தை எடுத்துப் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்.

எனக்கு கொங்கு ஸ்லாங் வரல: மணிகண்டன்

என்கூட நடிச்சவங்க எல்லாம் ஒரு பத்து ஆண்டுகளாக நக்கலைட்ஸ் டீமில் பல வீடியோக்களில் ட்ரெயின் ஆகிட்டு இருந்திருக்காங்க. எனக்குதான் அவங்களோட வொர்க் பண்றப்ப, ஸ்லாங் வரல. அதற்காக பொறுமையாக எனக்கு விவரிச்சு, நல்லவிதமாக என்னை நடிக்க வைச்சாங்க. இது ஒரு டீம் எஃபர்ட் தான்.

இந்தப் படம் நாங்க நினைச்ச மாதிரி வந்தது பெரிய சந்தோஷம். நக்கலைட்ஸ் ஓனர் பிரசன்ன பாலச்சந்திரன் சாரை, அவரது நக்கலைட்ஸ் டீமில் வாழ்நாள் வழிகாட்டி மாதிரி பார்க்குறாங்க. உண்மையிலேயே பெரிய சுரங்கம் அவர். நிறைய உள்ள விசயங்களை உள்ளவைச்சுக்கிட்டு, அந்த நல்ல விஷயங்களைக் கொடுத்துட்டே இருக்கார்.

இந்தப் படம் பண்ணுனதில் நிறைய நல்ல விஷயம் நடந்துருக்கு என்றால், அதில் பிரசன்ன பாலச்சந்திரன் சாரின் பழக்கம் கிடைச்சதும் முக்கியமானது. ஜென்சன் மாதிரியான நிறைய நக்கலைட்ஸ் குழுவினரை பார்த்ததே மிகப்பெரிய சந்தோஷம்.’ என்று பேசினார்.

இந்தப்படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் குரு சோமசுந்தரம், இயக்குனர் சுந்தர்ராஜன், கனகம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், நிவேதிதா, முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைத்துள்ளார். சினிமாகாரன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.