பிச்சைக்காரனாக தனுஷ்... பண பலம் காட்டத் துடிக்கும் நாகார்ஜுனா... குபேரா ட்ரெய்லர் எப்படி?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிச்சைக்காரனாக தனுஷ்... பண பலம் காட்டத் துடிக்கும் நாகார்ஜுனா... குபேரா ட்ரெய்லர் எப்படி?

பிச்சைக்காரனாக தனுஷ்... பண பலம் காட்டத் துடிக்கும் நாகார்ஜுனா... குபேரா ட்ரெய்லர் எப்படி?

Malavica Natarajan HT Tamil
Published Jun 16, 2025 10:22 AM IST

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடித்த குபேரா ட்ரெய்லர் வெளியானது. சுவாரஸ்யமாக நகரும் இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

பிச்சைக்காரனாக தனுஷ்... பண பலம் காட்டத் துடிக்கும் நாகார்ஜுனா... குபேரா ட்ரெய்லர் எப்படி?
பிச்சைக்காரனாக தனுஷ்... பண பலம் காட்டத் துடிக்கும் நாகார்ஜுனா... குபேரா ட்ரெய்லர் எப்படி?

சமூகத்தில் உள்ள பணக்கார, ஏழை வர்க்கத்தினருக்கு இடையே உள்ள வித்தியாசம் மற்றும் பண பலத்தை சுற்றியே குபேரா திரைப்படம் இருக்கும் என்பதை ட்ரெய்லரைப் பார்த்தால் தெரிகிறது. இந்த ட்ரெய்லர் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன.

குபேரா ட்ரெயிலர்

குபேரா படத்தின் ட்ரெய்லர் தனுஷுடன் தொடங்குகிறது. அவர் ஒரு பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோடிக்கணக்கான பணத்தின் மதிப்பு பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். வரலாறு சொல்வது போல் இந்த நாட்டில் நீதி, நியாயம் இல்லை பணம், செல்வாக்கு தான் வேலை செய்யும் என்று சொல்லும் நாகார்ஜுனா பவர்ஃபுல் பணக்காரராக தோன்றுகிறார்.

நாகர்ஜூனா யார்?

தனுஷுக்கு ஆதரவாக நாகார்ஜுனா இருந்தாலும் அதன் பின்னால் ஏதோ காரணம் இருக்கும். நாகார்ஜுனா கிரே ஷேடிலும் காணப்படுகிறார். ராஷ்மிகா கதாபாத்திரம் தனுஷை நம்பும் நபராக உள்ளது. பணக்காரர்களே பணக்காரர்கள், சக்தி வாய்ந்தவர்கள் எப்போதும் உலகை ஆள்வார்கள் என்று ராஷ்மிகா மந்தனா கதாபாத்திரம் நம்புகிறது.

அரசாங்கத்தை ஆபத்தில் தள்ளும் பிச்சைக்காரன்

ஒரு பிச்சைக்காரன் அரசாங்கத்தை எப்படி ஆபத்தில் தள்ளினான் என்று ஒரு கதாபாத்திரம் ஆச்சரியப்படுகிறது. தனுஷை நாகார்ஜுனா தேடுவதால் ட்ரெய்லர் மேலும் தீவிரமாகிறது. தனுஷ் சமூகத்திற்கு சவால் விடுவதோடு இந்த ட்ரெய்லர் முடிகிறது. இந்த ட்ரெய்லரைப் பார்த்தால் சேகர் கம்முலா மீண்டும் ஒருமுறை தனது இயக்கத்தின் மூலம் திரையில் மேஜிக் செய்யப் போகிறார் என்பது போல் தெரிகிறது.

ட்ரெயிலர் தாமதம்

அகமதாபாத் விமான விபத்து காரணமாக குபேரா படத்தின் விளம்பர நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. குபேரா ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு முதலில் ஜூன் 13-ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதால் ஒத்திவைக்கப்பட்டது. இதுபற்றி படக் குழுவினர் அறிக்கை வெளியிடுகையில்.. “நாளை நடைபெறவிருந்த குபேரா ப்ரீ-ரிலீஸ் நிகழ்வை அகமதாபாத் விமான விபத்து காரணமாக ஒத்திவைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்” என்று அறிவித்தனர்.

ஜூன் 20 ரிலீஸ்

ஜூன் 15-ம் தேதி ஹைதராபாத்தில் இந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. குபேரா திரைப்படம் ஜூன் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. அமிகோஸ் கிரியேஷன்ஸ் பேனரில் சுனில் நாரங். புஸ்கூர் ராம்மோகன் ராவ் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தில் பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்த தனுஷ் மணிக்கணக்கில் குப்பை கிடங்கில் ஷூட்டிங் செய்த நாட்களை நினைவு கூர்ந்தார்.