‘மக்கள் கருத்து பாசிட்டிவாதான் இருக்கு.. ஆனா’ - தமிழ் வசூலில் படுத்த படுக்கையான குபேரா! - காரணம் சொன்ன இயக்குநர்
தனுஷ் நாயகனாக நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம் தெலுங்கில் பாக்ஸ் ஆபிஸில் அமோக வெற்றி பெற்று வரும் நிலையில், தமிழில் அந்த அளவு வசூல் இல்லை.

இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரது நடிப்பில் வெளியான திரைப்படம் குபேரா. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இந்தத்திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. ஆனால், தமிழில் படக்குழு எதிர்பார்த்த வசூலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் இது குறித்து படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா பேசி இருக்கிறார்.
தமிழில் வரவேற்பு பெறாதது ஏன்?
இது குறித்து அவர் பேசும் போது, ‘தெலுங்கில் இது விதிவிலக்காக உள்ளது. வெளிநாடுகளில் தமிழ் பார்வையாளர்களிடம் கூட படம் வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால் உள்நாட்டு தமிழ் சந்தையில் நான் இன்னும் நிறைய வசூலை எதிர்பார்த்தேன்.
அவர்களுக்கு திரைப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால் படம் குறித்தான மக்கள் கருத்து நன்றாகவே இருக்கிறது. ஆனால், அது பாக்ஸ் ஆபிஸில் வசூலாக மாறவில்லை. இந்தப் படத்தில் பிச்சைக்காரனாக தனுஷ் வெளிப்படுத்திய நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.