19 காட்சிகளை நீக்கச் சொன்ன தணிக்கை வாரியம்.. 13 நிமிட காட்சிகள் கட்! - குபேரா ரன் டைம் இவ்வளவா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  19 காட்சிகளை நீக்கச் சொன்ன தணிக்கை வாரியம்.. 13 நிமிட காட்சிகள் கட்! - குபேரா ரன் டைம் இவ்வளவா?

19 காட்சிகளை நீக்கச் சொன்ன தணிக்கை வாரியம்.. 13 நிமிட காட்சிகள் கட்! - குபேரா ரன் டைம் இவ்வளவா?

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 19, 2025 09:37 AM IST

சேகர் கம்முலாவின் குபேரா சிபிஎஃப்சியிடமிருந்து யுஏ சான்றிதழைப் பெற்றுள்ளார். இப்படம் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

19 காட்சிகளை நீக்கச் சொன்ன தணிக்கை வாரியம்.. 13 நிமிட காட்சிகள் கட்! - குபேரா ரன் டைம் இவ்வளவா?
19 காட்சிகளை நீக்கச் சொன்ன தணிக்கை வாரியம்.. 13 நிமிட காட்சிகள் கட்! - குபேரா ரன் டைம் இவ்வளவா?

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் இந்தப்படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் யூ/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இந்த தணிக்கையில் படத்தில் இருந்து கிட்டத்தட்ட 19 காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கின்றன.

இதன் மூலம் படத்தின் மொத்த நீளத்தில் இருந்து 13 நிமிடங்கள் 41 விநாடிகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி பார்க்கும் போது தற்போது குபேரா திரைப்படம் 3 மணி நேரம் 1 நிமிடமாக வந்து இருக்கிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறது.

சமூகத்தில் உள்ள பணக்கார, ஏழை வர்க்கத்தினருக்கு இடையே உள்ள வித்தியாசம் மற்றும் பண பலத்தை சுற்றியே குபேரா திரைப்படம் இருக்கும் என்பதை ட்ரெய்லர் காட்டியது. இந்த ட்ரெய்லர் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிப்பாளர்கள் சுனில் நாரங், புஸ்கூர் ராம்மோகன் ராவ் குபேரா திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

ரொம்ப கவலைப்பட்டேன்

முன்னதாக, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் ‘சேகர் சார் இந்த சினிமாவுக்காக ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணினார். ஹெல்த்தை கூட யோசிக்காம ரொம்பவே கஷ்டப்பட்டார். அவர் விஷயத்துல நான் ரொம்ப கவலைப்பட்டேன்.

இது எனக்கு 52வது தமிழ் படம், அதேசமயத்தில் ரெண்டாவது தெலுங்கு படம். சேகர் சாரோட நான் நடிச்ச முதல் படத்துக்கு முன்னாடியே இந்தக்கதையை எனக்கு சொன்னார். என் இரண்டாவது தெலுங்கு படத்தையும் அவர் கூட பண்றது ரொம்ப சந்தோஷம்" என்று தனுஷ் கூறினார்.

அற்புதமான கேரக்டர்

"குபேராவில் அற்புதமான கேரக்டர் கொடுத்ததுக்கு சேகர் சாருக்கு நன்றி. நாகார்ஜுனா சார்கூட வொர்க் பண்றது பென்டாஸ்டிக் எக்ஸ்பீரியன்ஸ். அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். அவர் சினிமா பார்த்துட்டு வளர்ந்தேன். அவர் கூட ஸ்கிரீன் ஷேர் பண்ணிக்கிறது மேஜிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்" என்று தனுஷ் பேசினார்.