சூர்யாவை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்..3 கோடியில் பந்தயம் அடித்த குபேரா! - மொத்த வசூல் எவ்வளவு?
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குபேரா’. இந்தத்திரைப்படத்தின் 2ம் நாள் வசூல் விபரங்களை பார்க்கலாம்.

பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் குபேரா. நாகார்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்ததிரைப்படம் முதல் நாளில் 14.7 கோடி அளவில் வசூல் செய்தது.
2 நாள் வசூல் எவ்வளவு?
அதிகப்படியாக தெலுங்கில் 10 கோடி வசூல் செய்த இந்ததிரைப்படம் தமிழில் 4 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. இந்த நிலையில் இரண்டாவது நாளான நேற்றைய தினம் குபேரா திரைப்படம் 16 கோடி வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் குபேரா திரைப்படம் 2 நாட்களில் 30.75 கோடி வசூல் செய்ததாக தெரியவந்திருக்கிறது. இந்தத்தகவல்கள் பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் sacnilk தளம் வெளியிட்டவை ஆகும்.
சூர்யாவை முந்திய தனுஷ்
கூடுதல் தகவல் என்னவென்றால் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான ரெட்ரோ திரைப்படம் இரண்டு நாட்களில் 27 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. அப்படி பார்க்கும் போது குபேரா திரைப்படம் அதனை விட 3 கோடி அதிகமாக வசூல் செய்து இருக்கிறது.