தெலுங்கில் தடம் பதித்தாரா தனுஷ்..குபேரா படத்தின் முதல் நாள் வசூல் நாள் எவ்வளவு தெரியுமா?
குபேராவின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 1: குபேரா படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான விபரங்கள் வெளியாகி இருக்கின்றன.

குபேரா பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 1: தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று குபேரா. நேற்று (20 -06-2025) வெளியான இந்தத்திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், படத்தின் வசூல் விபரங்களைப் பார்க்கலாம்.
வசூல் எவ்வளவு?
பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk.com வெளியிட்ட தகவல்களின் படி குபேரா திரைப்படம் வெளியான நேற்றைய தினம் 13 கோடி வசூல் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. தமிழில் 4.25 கோடி வசூல் செய்திருக்கும், இந்தப்படம் தெலுங்கில் 8.75 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆனால், இந்தப்படத்தின் வசூலானது கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தின் வசூலை விட குறைவானது ஆகும்.
தூக்கப்பட்ட 13 நிமிடங்கள்
இந்தப்படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் யூ/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இந்த தணிக்கையில் படத்தில் இருந்து கிட்டத்தட்ட 19 காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் படத்தின் மொத்த நீளத்தில் இருந்து 13 நிமிடங்கள் 41 விநாடிகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி பார்க்கும் போது தற்போது குபேரா திரைப்படம் 3 மணி நேரம் 1 நிமிடமாக வந்து இருக்கிறது. படத்தின் இந்த நீளம் ரசிகர்களிடம் சோர்வை ஏற்படுத்தி இருப்பதை படம் குறித்தான மக்கள் கருத்துகளில் பார்க்க முடிந்தது.