'தசாவதாரம் ஒரு கேரக்டருக்கு மேக்கப் போட்டு கலைக்கவே 5 மணி நேரம்போயிடும்.. இவ்வளவு கலெக்ட் ஆச்சு’: கே.எஸ். ரவிக்குமார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'தசாவதாரம் ஒரு கேரக்டருக்கு மேக்கப் போட்டு கலைக்கவே 5 மணி நேரம்போயிடும்.. இவ்வளவு கலெக்ட் ஆச்சு’: கே.எஸ். ரவிக்குமார்

'தசாவதாரம் ஒரு கேரக்டருக்கு மேக்கப் போட்டு கலைக்கவே 5 மணி நேரம்போயிடும்.. இவ்வளவு கலெக்ட் ஆச்சு’: கே.எஸ். ரவிக்குமார்

Marimuthu M HT Tamil Published May 17, 2025 10:14 AM IST
Marimuthu M HT Tamil
Published May 17, 2025 10:14 AM IST

'ஒரு ஷாட் எடுக்கிறதுக்கே, 5 லேயர், 13 லேயர் ஆகும். மேலும், 13 லேயர், 23 லேயர் எல்லாம் பண்ணியிருக்கேன். 13 லேயர் என்றால், அந்தக் காட்சியை 13 ஃபெர்ஷ்பெக்டிவ்வில் எடுக்கணும்’ என தசாவதாரம் படத்தின் மேக்கிங் பற்றி கே.எஸ்.ரவிக்குமார் பேசிய பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.

'தசாவதாரம் ஒரு கேரக்டருக்கு மேக்கப் போட்டு கலைக்கவே 5 மணி நேரம்போயிடும்.. இவ்வளவு கலெக்ட் ஆச்சு’: கே.எஸ். ரவிக்குமார்
'தசாவதாரம் ஒரு கேரக்டருக்கு மேக்கப் போட்டு கலைக்கவே 5 மணி நேரம்போயிடும்.. இவ்வளவு கலெக்ட் ஆச்சு’: கே.எஸ். ரவிக்குமார்

''தசாவதாரம் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு கலரில் இருக்கும், அதற்கு லைட் செட் செய்றது எவ்வளவு சவாலாக இருந்தது?

அதெல்லாம் ஃபுல்லாக சொல்லிட முடியாது. ஃபுல்லாக செட் பண்ணிடனும் லைட்டை. படத்தில் பத்துவேஷம்ன்னாலும், இன்னிக்கு ஒரு கமல்ஹாசன் சார் தான் வருவார். மறுநாள் தான், இன்னொரு கெட்டப் போட முடியும். ஏனென்றால், ஒரு கேரக்டருக்கு மேக்கப் போட்டு, கலைக்கிறதுக்கே, ஐந்து மணி நேரம், ஆறு மணி நேரம் போயிடும்.

இன்னிக்கு ஃபிளெட்சர் ரோல் என்றால், அவர் கூட யார் டயலாக் பேசுறவங்க அவங்க மட்டும் வந்தால் போதும். இல்லையென்றால், அவங்களுடைய டயலாக் ஸ்பீக்கரில் ஓடிட்டு இருக்கும். அதைத்தொடர்ந்து கமல் சார் பேசுவார். வேற கேரக்டர்கள் டயலாக் பேசுறமாதிரி செட் செய்றதில் சொதப்பினால், அடுத்து ஒன் மோர் டேக் போயிடும். அந்தப் படம் முழுக்க கிரீன் மேட் தான். இரண்டு மூன்று கமல்ஹாசன் இருக்கார்னா, அங்கங்கு அந்த கதாபாத்திரங்களின் உயரத்தில் ஸ்டிக் இருக்கும். ஒரு ஷாட் எடுக்கிறதுக்கே, 5 லேயர், 13 லேயர் ஆகும். மேலும், 13 லேயர், 23 லேயர் எல்லாம் பண்ணியிருக்கேன். 13 லேயர் என்றால், அந்தக் காட்சியை 13 ஃபெர்ஷ்பெக்டிவ்வில் எடுக்கணும்.

சுனாமி வர்ற காட்சிகள் எல்லாம் 23 லேயர் போச்சு. இந்த பக்கம் தண்ணீர் வர்றது, அந்தப் பக்கம் தண்ணீர் வர்றது. கிளாஸ் உடையுறது, பறந்து போறது இதெல்லாம் லேயர்ஸ் தான். அதில் ஒரு கேரக்டர் உயரமாக இருக்கும். இன்னொரு கேரக்டர் குள்ளம் என்பது தான், இன்னும் சவால்.

ஃபிலிம் மேக்கிங் கத்துக்கணும் என்றால், தசாவதாரத்தோட மேக்கிங் தெரிஞ்சாலே போதும் என்கிற மாதிரி தான். ஏனென்றால், அவ்வளவு இருக்கும்?.

அந்தக் காலத்தில் மேக்கிங் எல்லாம் பெரிஷாக எடுத்து வைச்சுக்கல. இருக்கு. கொஞ்சமாகத் தான் இருக்கு. அது மறுபடியும் பார்த்து எடுக்கணும்.

தசாவதாரம் மேக்கிங் புக்காகவோ, மாஸ்டர் கிளாஸ் ஆகவோ பண்ற ஐடியா இருக்கிறதா சார்?

தசாவதாரம் ஒவ்வொரு சீனையும் போட்டுட்டுத்தான் பேசணும். அப்பத்தான் சொன்னால் புரியும். நிறைய இருக்கும்.

தசாவதாரம் படத்தை எடுக்கும்போது, கிராஃபிக்ஸ் வேலைகளை சரியாக முடிச்சு, எப்படி சீக்கிரமாக எடுத்துக்கொடுத்தீங்க?

தசாவதாரம் சொன்னதேதியை விட ஜாஸ்தியாகிடுச்சு. கதையும் நாளுக்கு நாள் பெரிசாகிடுச்சு. பட்ஜெட்டும் 15 கோடி ரூபாய், 25 கோடி ரூபாய் ஆகி அடுத்து 38 கோடி ரூபாய் ஆகிடுச்சு. விளம்பரம் அப்படின்னு மொத்தமாக சேர்த்து 43 கோடி ரூபாய் பட்ஜெட் என வந்திடுச்சு. அடுத்து படம் 68 கோடி ரூபாய் கலெக்ட் ஆச்சு. அதெல்லாம் வேற.

ஒரு கட்டத்துக்கு மேல், ஆஸ்கர் ரவிச்சந்திரன் சார் பொறுமையை இழந்திட்டார். சுனாமி கிராஃபிக்ஸ் வொர்க், பாங்காக்கில் கொடுத்திருந்தோம். அவனுங்க கொஞ்சம் தாமதப்படுத்திட்டாங்க. நிறைய வொர்க் இருந்தது. அதனால் தான், ஃபைனல் புரொடக்ட்டுக்கு இன்னும் ஒரு மாசம் இருந்திருந்தால், கலிஃபுல்லாவுக்கு எல்லாம் மேக்கப் தெரியாமல் செய்திருக்கலாம்ன்னு தோணும். கமல் சாருக்கு அடிக்கடி இதெல்லாம் தோணும். இன்னும் ஒரு 15 நாள் கிடைச்சிருந்தால் சுனாமி காட்சி எல்லாம் சரியாக கொண்டுவந்திருக்கலாம்ன்னு எனக்குத் தோணும்’’ என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியிருக்கிறார்.

நன்றி: பிளாக்‌ஷிப் சினிமாஸ் யூடியூப் சேனல்!