‘நீங்க யார் சார் அதைச் சொல்றதுக்கு நாங்க கூப்பிடுவோம்’: கமல்ஹாசன் முன் உலகநாயகன் என அழைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘நீங்க யார் சார் அதைச் சொல்றதுக்கு நாங்க கூப்பிடுவோம்’: கமல்ஹாசன் முன் உலகநாயகன் என அழைத்த கே.எஸ்.ரவிக்குமார்!

‘நீங்க யார் சார் அதைச் சொல்றதுக்கு நாங்க கூப்பிடுவோம்’: கமல்ஹாசன் முன் உலகநாயகன் என அழைத்த கே.எஸ்.ரவிக்குமார்!

Marimuthu M HT Tamil Published May 03, 2025 03:46 PM IST
Marimuthu M HT Tamil
Published May 03, 2025 03:46 PM IST

‘இன்னிக்கு தான் சொல்றாங்க, ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு எல்லாம் நைட்டில் தான் வொர்க் பண்றாங்கன்னு. ஆனால், அந்தக் காலத்திலேயே கிரேஸி மோகன் சார் நைட் நேரம் தான் உட்கார்ந்து எழுதுவார். நைட் ஒரு மணிக்கு வெத்தலையைப் போட்டுட்டு வந்தார் என்றால், விடியவிடிய எழுதுவார்’ என கே.எஸ்.ரவிக்குமார் புகழாரம் சூட்டினார்.

‘நீங்க யார் சார் அதைச் சொல்றதுக்கு நாங்க கூப்பிடுவோம்’: கமல்ஹாசன் முன் உலகநாயகன் என அழைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
‘நீங்க யார் சார் அதைச் சொல்றதுக்கு நாங்க கூப்பிடுவோம்’: கமல்ஹாசன் முன் உலகநாயகன் என அழைத்த கே.எஸ்.ரவிக்குமார்!

அப்போது நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், கிரேஸி மோகனின் சகோதரர் மாது பாலாஜி உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ‘’அஜித் தன்னை ’தல’ன்னு கூப்பிடாதீங்க. ஏ.கே.ன்னு கூப்பிடுங்கன்னு சொன்னால், அடுத்த படத்தில் அவரது ரசிகர்கள் ரிலீஸின்போது ’தல’ன்னு தான் கூப்பிடுறாங்க. அதை மாத்தவே முடியாது. உலக நாயகன்னு கூப்பிடாதீங்கன்னு கமல்ஹாசன் சார் சொல்றார்.

நீங்க யார் சார் அதைச் சொல்றதுக்கு, நாங்க கூப்பிடுவோம். இது ஒரு தலைக்காதல் மாதிரி. நீங்கள் காதலிக்கவில்லை என்றால் பரவாயில்லை. நாங்கள் காதலிப்போம். நீங்க பத்மஸ்ரீ போட்டுக்கங்க. தனியாக நிற்க ஒரு பெயர் வேண்டுமில்லையா. நாங்கள் கூப்பிடுவோம் உலகநாயகன் கமல் சார் என்று. அதைவிட சூப்பரா விண்வெளி நாயகன் என்று மணிரத்னம் சார் கூப்பிடுறார். இதைவிட ஒரு பட்டமே இல்லை. உலகநாயகன் கமல்ஹாசன் சார் இருக்கும்மேடையில் என்னைக் கூப்பிட்டதற்கு ரொம்ப நன்றி மாது சார்.

’அவ்வை சண்முகிக்கு அவ்வளவு எழுதினார், கிரேஸி மோகன் சார்’: கே.எஸ்.ரவிக்குமார்

அந்தக் காலத்தில் இணைய வசதி இருந்திருந்தால் எல்லாம் நெட்டிலும் ஹார்ட் டிஸ்கிலும் தான் எடுத்து வைச்சிருப்பார், கமல் ஹாசன் சார். அவ்வை சண்முகி படத்துக்கு அவர் எழுதியது அவ்வளவு பேப்பர் இருந்தது சார். அதெல்லாம், படம் எடுத்தபின் எடைக்குப் போடப்பட்டது.

அந்தக் காலத்தில் அதெல்லாம் நாம் எடுத்துவைக்கல. கமல் சார் அவருடைய எண்ணங்களை படங்களாக எடுத்துவைச்சிருக்கார். எப்போது வேண்டுமென்றாலும்போய் நூலகம் மாதிரி பார்க்கலாம்.

கிரேஸி மோகன் சாரின் நாடகத்தை புத்தகங்களாகக் கொண்டு வந்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி மாது சார். மாது சாரை அமெரிக்கா போறதுக்கு முன் பார்த்தது. ஜெயராம் சாரையும் பார்த்து பலநாட்கள் ஆச்சு. கமல் சாரும் இந்தப் பக்கம் படம், அந்தப் பக்கம் அரசியல்னு பரபரப்பாக இருக்கார். ஏ.ஐ. வேற படிச்சிட்டு வந்திருக்கார். இவங்களை எல்லாம் பார்க்கிறதுக்கு திருச்சியில் இருந்து வர்றேன்.

கிரேஸி மோகன் சாரோட வொய்ப்க்கும் எனக்கும் ஒரே நாளில் பிறந்த நாள், மே 30ஆம் தேதி. எப்போது பேசவில்லை என்றாலும், என் பிறந்த நாளுக்கு கூப்பிடுவார்.

பாலி தீவுக்குப் போயிட்டு ஹைதராபாத் சூட்டிங்கிற்குப் போறேன். ஏர்போர்ட்டில் இருந்தபோது, எனக்கு போன் பண்ணி, கிரேஸி மோகன் சார் பேசிட்டிருந்தார். அடுத்து ஒரு பத்து நாளுக்குள் அவர் மரணம் பற்றி நியூஸ் வருது. அன்றைக்கு கமல் சார் போன் பண்ணி, கிரேஸி மோகன் சாரை பற்றி, என் கூட ஒரு மணி நேரம் பேசிக்கிட்டு இருந்தார்.

’கிரேஸி மோகன் சார் நைட்டில் தான் எழுதுவார்’: கே.எஸ்.ரவிக்குமார்

எல்லோரும் போக வேண்டியது தான். என்ன அவர் கொஞ்சம் முன்ன போயிட்டார். அவரை மறக்கமுடியாது. கமல் சார் உடனும் மோகன் சார் உடனும் நின்னுக்கிட்டே பேசிட்டு இருப்போம். 3 மணி நேரம் முதல் 4 மணிநேரம் வரை ஆகும். எனக்கு கால் வலிக்கும் சொல்லவே முடியாது.

மோகன் சாரும் நானும் தனியாகவும் நிறைய பேசியிருக்கோம். அப்போது எல்லாம் சொல்வார். என்னை நிறைய பேர் ஆரம்பகட்டத்தில் அவமானப்படுத்தியிருக்காங்கன்னு சொல்வார். அதன்பின் தான், தம்பியை வைச்சு நாடகம் போட்டோம்ன்னு சொல்வார்.

வசனம் எழுதுறதுக்கு எல்லாம் ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டதே இல்லை. மோகன் சார் சின்ன சின்ன கேரக்டர்ஸ் வரணும் என்பதற்காக, ரொம்ப மெனக்கெடுவார். அதுக்குத்தான் டைம் ஆகும். இன்னிக்கு தான் சொல்றாங்க, ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு எல்லாம் நைட்டில் தான் வொர்க் பண்றாங்கன்னு. ஆனால், அந்தக் காலத்திலேயே கிரேஸி மோகன் சார் நைட் நேரம் தான் உட்கார்ந்து எழுதுவார். நைட் ஒரு மணிக்கு வெத்தலையைப் போட்டுட்டு வந்தார் என்றால், விடியவிடிய எழுதுவார்.

அவரது தம்பி மாது அவருக்கு இந்த புத்தகத்தொகுப்பை கொண்டு வந்து நன்றிக்கடன் செய்திருக்கார். வாழ்த்துகள்’’, என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியிருந்தார்.