Kpy Bala: விஜய் அழைத்து கேட்டாலும் நோ தான்.. உறுதியான முடிவில் இருக்கும் கேபிஒய் பாலா
Kpy Bala: போதிய அரசியல் அறிவு இல்லாத காரணத்தினால் தான் அரசியலில் இறங்க மாட்டேன் என கேபிஒய் பாலா திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

Kpy Bala: கேபிஒய் பாலா
விஜய் டிவிக்கு கிடைத்த முத்துகளில் பாலாவும் ஒருவர். அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா . அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். இந்த நிகழ்ச்சி எங்கும் பிரபலம் ஆவதற்கு பாலாவும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது . அவரின் டைமிங் காமெடி தான் பாலாவின் ஸ்பெஷல். அதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
கோமாளி பாலாவுடன் சமைக்கவும்
பின்னர் பட வாய்ப்புகள் வரத் தொடங்கிய காரணத்தினால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியவர். படங்களில் நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஆடம்பரமாக செலவு செய்வார்கள் . ஆனால் பாலா தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்தி வருகிறார்.
கேபிஒய் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் பல உதவிகளை செய்து வருகிறார்கள். மாற்றம் என்ற சேவை அறக்கட்டளையை தொடங்கி எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார்கள். இதில் சாதரண மக்கள் தொடங்கி திரைப் பிரபலங்கள் வரை இணைந்து இருக்கிறார்கள்.
கருப்பு பணம் மாற்றமா?
மாற்றம் சேவை மூலமாக கேபிஒய் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் செய்யும் உதவிகளுக்கு ஒரு பக்கம், பாராட்டு வந்தாலும் மறுபக்கம் விமர்சனம் வந்த வண்ணம் உள்ளன.
இருவரும் கட்சியில் இணைய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. விஜய் ஆரம்பித்து இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியில் தான் இருவரும் இணைய முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நோ அரசியல்
இந்நிலையில் பாலா, நேற்று ( ஜூன் 15) சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அடுக்குமாடியில் நடந்த கண்காட்சியில் கலந்து கொண்டார்.
இந்த கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் பாலா. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
விஜய் அழைத்தாலும் நோ தான்
அவர் கூறுகையில், ” எனக்கு போதிய அரசியல் அறிவு இல்லாத காரணத்தினால் நான் அரசியலில் இறங்க மாட்டேன். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அழைத்தாலும் நிச்சயம் அரசியலில் இறங்க மாட்டேன்.
நான் தற்போது கூடுதலாக உழைத்து வருகிறேன். அதில் கிடைக்கும் பணத்தை வைத்தே பிறருக்கு உதவி செய்து வருகிறேன். மேலும் எனது திருமணத்திற்கு பிறகும் மக்களுக்கு உதவி பணி தொடரும்” என தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்