KPY Bala: வாட்டர் பாட்டில் விற்க கூடாது.. சிறுவனின் வாழ்க்கையை மாற்றிய கேபிஒய் பாலா
KPY Bala: வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வாட்டர் பாட்டில்களை ஒரு சிறுவன் விற்பனை செய்து வந்து உள்ளான். பாலா அந்த வந்த சிறுவனுக்கு உதவி செய்து உள்ளார்.

KPY Bala: விஜய் டிவிக்கு கிடைத்த முத்துகளில் பாலாவும் ஒருவர். அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா . அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
இந்த நிகழ்ச்சி எங்கும் பிரபலம் ஆவதற்கு பாலாவும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது . அவரின் டைமிங் காமெடி தான் பாலாவின் ஸ்பெஷல். அதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
கோமாளி பாலாவுடன் சமையல்
பின்னர் பட வாய்ப்புகள் வரத் தொடங்கிய காரணத்தினால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியவர். படங்களில் நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஆடம்பரமாக செலவு செய்வார்கள் . ஆனால் பாலா தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்தி வருகிறார்.
கேபிஒய் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் பல உதவிகளை செய்து வருகிறார்கள். மாற்றம் என்ற சேவை அறக்கட்டளையை தொடங்கி எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார்கள். இதில் சாதரண மக்கள் தொடங்கி திரைப் பிரபலங்கள் வரை இணைந்து இருக்கிறார்கள்.
கல்விக்கு உதவி
இந்நிலையில் தற்போது பாலா, வாட்டர் பாட்டில் விற்பனை செய்து வந்த சிறுவனுக்கு உதவி செய்து உள்ளார். வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வாட்டர் பாட்டில்களை ஒரு சிறுவன் விற்பனை செய்து வந்து உள்ளான்.
இதை பார்த்த பாலா அவருக்கு ஒரு ஆண்டிற்கு தேவையான கல்விக்கு தேவையான பணத்தை கொடுத்து உதவி செய்து இருக்கிறார். மேலும் மருத்துவராக வேண்டும் என்ற அவரின் ஆசையை நிறைவேற்றி தருவதாக நம்பிக்கை கொடுத்து இருக்கிறார்.
பாலா வெளியீட்ட பதிவு
இந்த நிகழ்வை வீடியோவாக எடுத்து கேபிஒய் பாலா வெளியீட்டு இருக்கும் பதிவில், “ நான் இந்த பெட்ரோல் பங்கிற்கு தவறாமல் சென்று வருகிறேன், இந்த அழகான பையன் தண்ணீர் பாட்டில்களை விற்பதை ஒரு முறை பார்த்தேன். ஏன் இப்படி செய்கிறார் என்று நான் அவரிடம் கேட்டேன், அவர் தனது நிதி நிலைமையை என்னிடம் கூறினார்.
நான் அவரை நேரடியாக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவரது தாயாரை சந்தித்து அவரது கல்விக்கான ஒரு ஆண்டிற்கான நிதியுதவியை வழங்கினேன். அவருக்கு மிகவும் நல்வாழ்த்துக்கள் “ எனக் குறிப்பிட்டு உள்ளார். பாலாவின் இந்த செயலுக்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்