தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Poonam Pandey: ‘‘எல்லாம் விளம்பர வெறி.. வெட்கக்கேடு..’ - பூனம் பாண்டேவை வெளுத்த கஸ்தூரி!

Poonam Pandey: ‘‘எல்லாம் விளம்பர வெறி.. வெட்கக்கேடு..’ - பூனம் பாண்டேவை வெளுத்த கஸ்தூரி!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 04, 2024 07:12 AM IST

அவர் அடித்த அடியினால் என் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அதையெல்லாம் நான் எவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டு இருந்தேன். நான்கு ஆண்டுகளாக அந்த வலியோடு அவருடன் நான் வாழ்ந்து வந்தேன். இது ஒரு முறை அல்ல பலமுறை நடந்து இருக்கிறது.

கஸ்தூரி தாக்கு!
கஸ்தூரி தாக்கு!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “ நான் இங்கே இருக்கிறேன், உயிருடன் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்னை கொல்லவில்லை. ஆனால் இந்த நோயை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றிய அறிவு இல்லாததால் ஆயிரக்கணக்கான பெண்களின் மரணம் அடைந்துள்ளனர்.

இது மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய் புற்றுநோயை நம்மால் முற்றிலும் வராமல் தடுக்க முடியும். HPV தடுப்பூசி மற்றும் ஆரம்பகால கண்டறிதல் சோதனைகளில் முக்கியமானது. இந்த நோயினால் யாரும் உயிரை இழக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் எங்களிடம் உள்ளன.” என்று பேசினார்.

பூனமின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வந்தன. அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் பூனம் பாண்டேவை விமர்சனம் செய்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவில், “ அவளின் வயது 32 என்று அவர்கள் குறிப்பிட்ட போதே தெரியும்… இது போலியான செய்தி என்று.. பூனம்பாண்டேவை காட்டிலும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது மிகவும் பிரபலமாக இருந்தது.

என்ன ஒரு விளம்பர வெறி.. உங்களது பிரபலத்திற்காக புற்றுநோயை பயன்படுத்துகிறீர்கள்? அவரது இந்த நடவடிக்கை வெட்கக்கேடாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதிர்ச்சியை தருகிறது” என்று பதிவிட்டு இருக்கிறார்.

 

முன்னதாக பூனம் பாண்டே, கங்கனா ரனாவத்தின் ரியாலிட்டி ஷோவான லாக் அப் நிகழ்ச்சில் கலந்து கொண்ட போது, அவரிடம் இன்னும் முன்னாள் கணவர் மீது காதல் இருக்கிறதா? என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பூனம் பாண்டே, "ஆமாம்.. நான் இன்னும் அவரை காதலிக்கிறேன். நான் இப்போதும் அவரை வெறுக்கவில்லை. எனக்கு அவரைப் பிடிக்கவில்லை. யாரும் இதுபோன்ற நிலைமை வரக் கூடாது. எனக்கு வீடு, தனித்தோட்டம், தனி மொட்டை மாடி எல்லாம் இருந்தது.

சொல்லப் போனால் அது ஒரு பெரிய வீடு. நான் ஒரு அறையில் இருந்தால், அந்த அறையில் இருக்க அனுமதி இல்லை. நீ ஏன் அந்த அறையில் இருக்கிறாய் என்று அவர் என்னிடம் கேட்பார்.

அவர் விரும்பும் அறையில் என்னை அவருடன் இருக்குமாறு வற்புறுத்துவார். சுத்தமான காற்று சிறிது நேரம் வேண்டும் என்று நான் மொட்டை மாடிக்கு செல்ல விரும்புவேன், அதை அவரிடம் சொல்லும்போது, ​​அதற்கு அனுமதிக்கமாட்டார். அவரும் என்னுடன் வர மாட்டார். சொந்த வீட்டில் எனது தொலைபேசியைத் தொட அனுமதிக்கப்படவில்லை.

எனக்கு நாய் என்றால் மிகவும் பிடிக்கும். அது என்னுடன் தூங்கினால், நான் அவரை விட என் நாய்களை நேசிக்கிறேன் என்று அவர் சொல்வார். அது என்ன வகையான சிந்தனை என்று எனக்கு தெரியவில்லை. என் நாய்களை நேசித்ததற்காக நான் ஏன் அடிக்கப்பட வேண்டும்?.

அவர் அடித்த அடியினால் என் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அதையெல்லாம் நான் எவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டு இருந்தேன். நான்கு ஆண்டுகளாக அந்த வலியோடு அவருடன் நான் வாழ்ந்து வந்தேன். இது ஒரு முறை அல்ல பலமுறை நடந்து இருக்கிறது.

என் மூளையில் காயம் குணமடையவில்லை, ஏனென்றால் அவர் என்னை மீண்டும் மீண்டும் அதே இடத்தில் அடித்துக்கொண்டே இருப்பார். நான் மேக்கப் போட்டு, பளபளப்பாக்கி, சிரிப்பேன். எல்லோருக்கும் முன்பு நான் அதை மறைக்க விரும்பி கூலாக நடிப்பேன். மீண்டும் மீண்டும் அதே இடத்தில் அடிபடுவது வழக்கமாக இருந்தது “ என பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.