தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kollywood Controversy: திரும்பிய பக்கம் முழுவதும் சர்ச்சை.. கோலிவுட் சினிமா சந்தித்த சமீபத்திய பஞ்சாயத்து என்னென்ன?

Kollywood Controversy: திரும்பிய பக்கம் முழுவதும் சர்ச்சை.. கோலிவுட் சினிமா சந்தித்த சமீபத்திய பஞ்சாயத்து என்னென்ன?

Aarthi Balaji HT Tamil
May 23, 2024 08:51 AM IST

Kollywood Controversy: பாடகி சுசித்ரா பரபரப்பு பேட்டி தொடங்கி இளையராஜாவின் காப்புரிமை பஞ்சாயத்து வரை சமீப காலமாக கோலிவுட்டில் விவாதத்தை கிளப்பிய சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.

கோலிவுட் சினிமா சந்தித்த சமீபத்திய பஞ்சாயத்து என்னென்ன?
கோலிவுட் சினிமா சந்தித்த சமீபத்திய பஞ்சாயத்து என்னென்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

பாடகி சுசித்ரா பரபரப்பு பேட்டி

பாடகி சுசித்ரா அண்மையில் குமுதம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்திருக்கிறார். தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து, தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரை ஓரினச்சேர்க்கையாளர் என்று அழைத்தார்.

அத்துடன் கோலிவுட் சினிமா நட்சத்திரங்கள் குறித்தும் கடுமையான குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். சுசித்ராவின் அறிக்கை சமூக ஊடகங்களில் ரசிகர்களிடம் பெரும் விவாதமாக மாறியது. அதே நேரத்தில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் இழிவான கருத்துக்களுக்காக அவரை கேலி செய்தார். இதனால் சுசித்ரா மீது கார்த்திக் குமார் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

சந்தானத்தின் கசப்பான டயலாக்

நடிகர் சந்தானத்தின் சமீபத்திய ரிலீஸ் படம், 'இங்க நான் தான் கிங்கு'. மே 17 அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் ப்ரோமோவில் சந்தானத்தில் கசப்பான வசனம் இருந்ததால், ரிலீஸுக்கு முன்பே சர்ச்சையை கிளப்பியது. ரசிகர்களை தவறான வழியில் தூண்டியதற்காக சந்தானத்தை நெட்டிசன்களால் கடுமையாக சாடினார்கள்.

இளையராஜாவின் காப்புரிமை பஞ்சாயத்து

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு ‘கூலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் டீசரை படக்குழுவினர் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் இளையராஜா இசையமைத்த விண்டேஜ் பாடலில் இருந்து ஒரு வரியை ரீகிரியேட் செய்தது படத்தை சிக்கலில் ஆழ்த்தியது.

'கூலி' டைட்டில் டீசரில் பாடலின் பயன்பாடு இருப்பதாகக் கூறி இளையராஜா பதிப்புரிமை நோட்டீஸ் அனுப்பினார். மேலும் அவர் பாடலை டைட்டில் டீசரில் இருந்து நீக்குமாறு கூறி உள்ளார்.

இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வருவதற்குள் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் குணா பட பாடல் பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் இளையராஜா.

இது தொடர்பான நோட்சில், “ பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் இளையராஜா பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் ஆவார். அதனால் அவரிடம் முறையாக உரிமை பெற்று பாடலை பயன்படுத்தியிருக்க வேண்டும். அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும்.

பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால், பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

உத்தம வில்லன் விவகாரம்

நடிகர் கமல் ஹாசனின் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம், உத்தம வில்லன். ஒப்பந்தத்தின்படி படத்துக்கு நஷ்டம் ஏற்பட்டதால் அதை ஈடுகட்ட நடிகர் கமல் ஹாசனுக்கு எதிராக 'உத்தம வில்லன்' தயாரிப்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் கமல் ஹாசன் அமைதியாக இருந்தார்.

ஆனால் 2015 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரான பி.எல்.தேனப்பன், ரசிகர்களுக்கு இந்தப் பிரச்னையை தெளிவுபடுத்தினர். பண பிரச்னை காரணமாக மீண்டும் அடுத்த படத்திற்கு கமல் ஹாசன் தேதி கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்