Actor Kumarimuthu: காமெடி நடிகர் குமரிமுத்து நினைவு தினம் இன்று.. சிரிப்பாலே மக்களை வென்றது எப்படி?
Kumarimuthu Memorial day: வித்தியாசமான சிரிப்பாலேயே மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த காமெடி நடிகர் குமரிமுத்துவின் நினைவு தினம் இன்று (பிப் 28).

1980களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் பலரும் வலம் வந்தனர். ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். அப்படி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களில் ஒருவர் தான் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து. மாறுகண்களுடன்மிகவும் சாதாரணமான தோற்றத்தை கொண்ட குமரிமுத்து, சினிமாவில் பல இன்னல்களையும், கஷ்டங்களையும் கடந்து திரைத்துறையில் சாதித்தவர்.
15 வயதில் கன்னியாகுமரியில் இருந்து பிழைப்புக்காக சென்னை வந்த முத்தையாவை குமரிமுத்துவாக்கி பெருமை சேர்த்தவர் மறைந்த நடிகர் நாகேஷ். 'பொய் சொல்லாதே' என்கிற படத்தில் நடிகர் நாகேஷ்தான் குமரிமுத்துவை முதன் முதலில் திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார்.
'மனசுக்குள் மத்தாப்பு' என்கிற படத்துல குமரிமுத்து வைத்தியரா நடித்திருப்பார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் குமரிமுத்து அவரோட டிரேட் மார்க் சிரிப்பை கேஷுவலா சிரிக்க, அதைப் பார்த்த இயக்குநரோ, இதே மாதிரி படத்துலேயும் சிரிங்கன்னு கேட்டிருக்கார். அப்புறம் அதுவே சினிமாவுல குமரிமுத்துவுக்கான அடையாளமாகிப் போச்சுன்னு அவரது மகள் எலிசபெத் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.