தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Kollywood Cinema Trending News On August 15

பிரின்ஸ் பட அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் - முக்கியச் செய்திகள்(ஆகஸ்ட் 15)

Aarthi V HT Tamil
Aug 15, 2022 05:51 PM IST

சினிமாவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள்(ஆகஸ்ட் 15)
முக்கியச் செய்திகள்(ஆகஸ்ட் 15)

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் ஆர்யா சைக்கிளில் 1540 கிலோ மீட்டர் தூரம் சென்று சாதனை படைத்து உள்ளார்.

அஜித் நடிக்கும் அவரின் 61 ஆவது படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது.

பிரபாஸ் நடித்து வரும் சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகை அதிதி ஷங்கர் தனக்கு தங்கை போன்றவர் என கூல் சுரேஷ் கூறியுள்ளார்.

பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு பேசிய கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நடிகர் சூர்யா 25 லட்சம் ரூபாய் கொடுத்து உள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

பிசாசு 2 படத்தின் ஆண்ட்ரியா இருக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் பட முன்பதிவு தொடங்கியது.

இசைஞானி இளையராஜா திருவண்ணாமலையில் தேசிய கொடியேற்றினார்.

பிரின்ஸ் திரைப்படத்தின் முதல் சிங்கிள் இந்த வாரம் வெளியாக உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் தமண் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

IPL_Entry_Point

டாபிக்ஸ்