Dhanush: ‘விவாகரத்து வேணும்’ – கூட்டாக கோர்ட் படியேறிய தனுஷ், ஐஸ்வர்யா! - அதிர்ச்சியில் கோலிவுட்!
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2004 ம் ஆண்டு நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார்.
பிரபல நடிகராக தனுஷ் மற்றும் அவரது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் கடந்த 2004- ம் ஆண்டு பிரபல நடிகராக வலம் வரும் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் இருக்கின்றனர்.
‘3’ திரைப்படம் மூலம் இயக்குநராகவும் களமிறங்கிய ஐஸ்வர்யா முதல் படத்தில் தன்னுடைய கணவரான தனுஷையே கதாநாயகனாக கமிட் செய்து நடிக்க வைத்தார். இசையமைப்பாளர் அனிருத் அறிமுகமான இந்தப்படத்தில் இடம் பெற்ற ஒய் திஸ் கொல வெறி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. ஆனால், அந்தப்படம் பெரிய வெற்றியை பெற வில்லை. தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார். அந்தப்படமும் பெரிய வெற்றியை பெற வில்லை.
இதற்கிடையே மகன்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக சினிமாவில் இருந்து விலகினார் ஐஸ்வர்யா. இந்த நிலையில், கடந்த 2022 ம் ஆண்டு யாரும் எதிர்பாரா வண்ணம் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாகவும், தங்களது பிரைவசிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் தத்தமது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்து அறிக்கை வெளியிட்டனர்.