Kanguva: ரூ. 200 கோடிக்கு மேல் நஷ்டம்.. எதிர்மறை விமர்சனங்களை மீறி ஆஸ்கர் ரேஸில் கங்குவா இடம்பிடித்தது எப்படி?
Kanguva in Oscar: பாக்ஸ் ஆபிஸில் ரூ. 200 கோடிக்கும் மேல் நஷ்டமடைந்த கங்குவா படம், ஆஸ்கர் ரேஸில் இடம்பிடித்திருப்பது பலருக்கு ஆச்சர்யம் அளிப்பதாகவே உள்ளது. இந்த படம் ஆஸ்கர் ரேஸில் இடம்பிடித்திருக்கும் பின்னணியை பார்க்கலாம் 2025

சூர்யா நடிப்பில் மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கங்குவா படம் எதிர்மறையான விமர்சனங்களால் படுதோல்வியை சந்தித்து. ஆனால் கடந்த இரு நாள்களுக்கு முன் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை லிஸ்டில் இந்த படம் இடம்பிடித்திருந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
பல்வேறு பிரிவுகளில் விருதுக்காக போட்டியிடும் 323 படங்கள் லிஸ்டை ஆஸ்கர் விருது கமிட்டி வெளியிட்டது. இதில் சிறந்த படத்துக்கான போட்டி பிரிவில் இடம்பிடித்திருக்கும் 207 படங்களில் சூர்யாவின் கங்குவா படமும் இருந்தது. இந்த படத்துடன் மலையாளத்தில் ப்ருத்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம், இந்தி படமான சந்தோஷ் உள்பட சில இந்திய படங்களும் இந்த லிஸ்டில் இருந்தன
ஆஸ்கர் ரேஸில் கங்குவா வந்தது எப்படி
ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட விருதுக்கான பிரிவில், இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வாக தேர்வு செய்யப்பட்ட படமாக லபாட்டா லேடீஸ் படம் உள்ளது. ஆனால் ஆஸ்கர் விருதுக்கான பிற பிரிவுகளுக்கான போட்டியில் பல ஆயிரம் டாலர்களை கட்டணமான செலுத்தி, விண்ணப்பிக்கலாம். இந்த வழிமுறையை பின்பற்றி சிறுத்தை சிவா இயக்கித்தில் சூர்யா நடித்த கங்குவா படம் ஆஸ்கர் ரேஸுக்கு விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது.