‘பசங்கள கன்ட்ரோல் பண்ணவே முடியல.. 1 நிமிட பிரபலத்திற்காக.. கரிச்சுக்கொட்றத நிப்பாட்டுங்க..’ - கிருத்திகா உதயநிதி
உதயநிதியே, அவர்களை ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு இந்த தலைமுறை மாறிவிட்டது. அதை எப்படி கையில் எடுத்து கையாளப் போகிறோம் என்று தெரியவில்லை. கஷ்டமாகத்தான் இருக்கும்; அவர்களெல்லாம் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். -கிருத்திகா உதயநிதி
காதலிக்க நேரமில்லை படம் மூலமாக பொங்கல் ரேசில் களமிறங்கி இருக்கும் கிருத்திகா உதயநிதி, தன்னுடைய பர்சனல் சார்ந்த விஷயங்கள் குறித்து பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
கஷ்டமாகத்தான் இருக்கும்
இது குறித்து அவர் பேசும் போது, ‘என்னுடைய மகனையும், மகளையும் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. உதயநிதியே, அவர்களை ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு இந்த தலைமுறை மாறிவிட்டது. அதை எப்படி கையில் எடுத்து கையாளப் போகிறோம் என்று தெரியவில்லை. கஷ்டமாகத்தான் இருக்கும்; அவர்களெல்லாம் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்து விட்டார்கள்.
அவர்களிடம் சென்று இதைச்செய்யாதே, அதைச்செய்யாதே என்று கூறினால், ஏன் என்னை கட்டுப்படுத்துகிறீர்கள் என்று கேட்கிறார்கள். உண்மையில் அதற்கான பதிலும் நம்மிடம் இல்லை. எங்கள் குடும்பத்திற்கென்று எந்த விதிகளும் கிடையாது. வேலை முடித்து வந்தால் வீட்டில் ஒன்றாக இருப்போம். அந்த நேரத்தில் என்ன எங்களால் திட்டமிட முடியுமோ, அதை திட்டமிட்டு சந்தோஷமாக இருப்போம்.
உதயநிதி காதலை சொல்லும் பொழுதே
விமர்சனங்கள் குறித்து கேட்கிறீர்கள்.., விமர்சனங்கள் வரும்பொழுதுதான் அதை எடுத்துக் கொண்டு, அதிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு, முன்னேறிச் செல்ல முடியும். இந்த மாதிரியான விமர்சனங்கள் வரும் என்பதால்தான் உதயநிதி காதலை சொல்லும் பொழுதே, பிரபலங்களின் வீட்டில் எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று கூறினேன். ஆனால் வந்த பிறகு அதை எதிர்கொண்டு தானே ஆக வேண்டும்.
மோசமான விஷயம்.
உண்மையில், நேர்மையான விமர்சனத்தை நான் வரவேற்கிறேன். யார் சொல்கிறார்கள் என்பதைப் பார்த்து அதை எடுத்துக் கொள்கிறேன். ஆனால், இப்போது நிறைய பேர் ஒரு நிமிட பிரபலத்திற்காக என்னென்னவோ பேசுகிறார்கள். அதை ஒரு சிறந்த உதாரணமாக பார்க்க முடியாது. அதை அவர்கள் பர்சனல் அட்டாக்காக எடுத்துக் கொண்டு பேசுகிறார்கள்; அதைப் பார்த்து இப்போதைய தலைமுறை சோசியல் மீடியாவில் கமெண்டுகளை எழுதுகிறார்கள். அது உண்மையில் மோசமான விஷயம். மற்றவர்களை நாம் கரித்துக் கொட்டும் பொழுது, அந்த எண்ணம் தான் நமக்குள் இருக்கிறது என்பது வெளிப்படுகிறது. அது அவரை விட நம்மை தான் மிகவும் தாக்கும்.’ என்று பேசினார்.
காதலிக்க நேரமில்லை படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் கதையின் நாயகன் ஆகவும், கதையின் நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தினை கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கிறார். படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தில் இவர்கள் தவிர, யோகி பாபு, வினய் ராய், டி.ஜே. பானு, ஜான் கொக்கேன், லால், லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, வினோதினி, ரோஹன் சிங் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்துக்குண்டான இசையினை ஏ.ஆர்.ரஹ்மான் செய்திருக்கிறார்.
என்னை இழுக்குதடி பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான்!
காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது; இப்பாடலை கவிஞர் விவேக் எழுதியிருக்கிறார். பாடலை ஏ.ஆர். ரஹ்மானும், தீ-யும் கூட்டாக சேர்ந்து பாடியுள்ளனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்