Kiran Rathod: ‘காதல்ல நம்பிக்கை துரோகம் செஞ்சா… கர்மா வேலை செய்யும்’ - பிரேக் அப் அட்வைஸ் கொடுத்த கிரண்!
ரிலேஷன்ஷிப் ஆனது மிக நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டும் என்றால், அந்த உறவுக்கிடையே ஆழமான நம்பிக்கை இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். நீங்கள் காதலில் இருந்தீர்கள் என்றால், நீங்கள் காதலிக்கும் பெண்ணை அடிக்கடி பாராட்டுங்கள்.
பிரபல நடிகையான கிரண் தன்னுடைய காதல் தோல்வி குறித்து பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ காதலில் நம்பிக்கை துரோகம் என்பதை மன்னிக்கவே முடியாது. நானும் என்னுடைய காதலில் நம்பிக்கை துரோகத்தை சந்தித்திருக்கிறேன். ஆனால் இதில் நான் ஒரு விஷயத்தை உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன்.
அது என்னவென்றால் உங்களுக்கு ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்து விட்டால் தயவு செய்து அவருக்கு எதிராக வேலை செய்வதை நிறுத்துங்கள். அந்த நபரை அப்படியே உங்கள் வாழ்க்கையில் இருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். அவரை செல்லவிடுங்கள். அந்தக் கர்மாவிடம் அதனை விட்டு விடுங்கள். அது அவர்களை பார்த்துக் கொள்ளும்.
ரிலேஷன்ஷிப் ஆனது மிக நீண்ட நாட்கள் நிலைக்க வேண்டும் என்றால், அந்த உறவுக்கிடையே ஆழமான நம்பிக்கை இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். நீங்கள் காதலில் இருந்தீர்கள் என்றால், நீங்கள் காதலிக்கும் பெண்ணை அடிக்கடி பாராட்டுங்கள்.
அவளது ஆடை, முடி, கண், மூக்கு என ஒவ்வொன்றையும் பாராட்டுங்கள். அது அந்த பெண்ணை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தும். அதை நீங்கள் ஒரு முறை சொன்னால் பத்தாது ஒரு நாளைக்கு 100 முறை சொல்லுங்கள். என்ன நடந்ததாலும் அவள் உங்களோடு இருப்பாள்.
காதலில் பிரேக்கப் பை எதிர்கொள்வது எப்படி என்று கேட்கிறீர்கள், நான் காதலில் தோல்வியை சந்தித்து, அதிலிருந்து மீள்வதற்கு நான்கு வருடங்கள் எடுத்துக் கொண்டேன்.
பிரேக் அப் நடந்து விட்டால், நீங்கள் நாட்டையே மாற்றி விடுங்கள். அல்லது நீங்கள் இருக்கும் இடத்தை மாற்றி விடுங்கள். நீங்கள் எளிதாக அதிலிருந்து வெளியே வந்து விடலாம். அந்த இடத்தில் இருந்து கொண்டே நீங்கள் பிரேக் அப்-ல் இருந்து வெளியே வரவேண்டும் என்று நினைத்தால், அது நடக்காது; நீங்கள் உங்களது மொபைல் போனை சுட்ச் ஆப் செய்து விட்டு எங்காவது சென்று விடுங்கள்.” என்று பேசினார்.
முன்னதாக, கிரண் தன்னுடைய வாழ்க்கையின் கருப்பு பக்கத்தை கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார். அந்த பேட்டியையும் படியுங்கள்!
இது குறித்து அவர் பேசும் போது, “நான் என்னுடைய காதலனை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தவுடன்,படங்களில் நடிப்பதை நிறுத்தினேன். இவ்வளவு ஏன்?..அஜித் படத்தில் கூட நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது.
ஆனால் அதையும் நான் நிராகரித்தேன். காரணம் நான் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்து இருந்தேன். ஆனால் என்னுடைய காதல் மோசமான நிலைக்கு சென்று விட்டது. டாக்ஸிக்காக மாறிவிட்டது. இதனால் நான் அந்த உறவில் இருந்து வெளியே வர முடிவு செய்தேன். மீண்டும் சென்னைக்கு வந்தேன்.
தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்கி கொண்டிருந்தேன். அதற்காக முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தேன். அப்போது மொத்த சினிமா துறையுமே எனக்கு நண்பர்கள் போல தெரிந்தது.
எல்லோரும் நிச்சயமாக உங்களுக்கு நல்ல கதாபாத்திரங்களை கொண்டு வருகிறோம் என்று சொன்னார்கள். அதிக அக்கறை எடுத்துக் கொள்வது போல நடந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் பேசிய அன்றைய தினம் இரவு ஃபோன் செய்வார்கள். என்னை படுக்கைக்கு அழைப்பார்கள்.
அப்போதுதான் நான் புரிந்து கொண்டேன். இந்த சினிமா துறையில் நண்பர்கள் என்று யாருமே கிடையாது என்று. இன்று வரை யாரும் எனக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.
கொரோனா சமயத்தில் மொத்தமாக உலகம் முடங்கிய போது, என்னுடைய ஆப்பை நான் தொடங்கினேன். அதில் என்னுடைய கிளாமரான போட்டோக்கள், வீடியோக்களை பதிவு செய்தேன்.
அதைப்பார்த்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எல்லோரும் என்னை படுக்க அழைத்தார்கள். விசாரித்து பார்த்தால், என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் கிளாமரான போட்டோக்களை, வீடியோக்களை பதிவு செய்கிறேன். அதனால் அப்படி நினைக்கிறார்கள் என்று தெரிய வந்தது.
ஆனால் நிறைய நடிகைகள் இதை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களது கண் என் மீது தான் இருக்கிறது. நான் ஒன்னும் ஆபாச படத்தில் நடிக்கவில்லையே.. எனக்கு பிடித்த ஆடைகளை உடுத்தி நான் வீடியோக்களை பதிவிடுகிறேன். இது எனக்கு மிகப்பெரிய வலியை கொடுத்திருக்கிறது” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்