KiaraAdvani: 'உதடு உதடுதான் 2 உதடுதான்’ - லிப்லாக் செய்து ஹேப்பி பர்த் டே சொன்ன கியாரா அத்வானி
காதல் கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு லிப்லாக் செய்து ஹேப்பி பர்த் டே சொன்ன கியாரா அத்வானியின் செயலால் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவே ஹாட் ஆகியுள்ளது.
பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, தனது காதல் கணவரான நடிகர் சித்தார்த் லிப்லாக் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய சம்பவம், இளசுகளை சூடாக்கியுள்ளது.
பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் தனது அழகாலும் நடிப்பாலும் முன்னணி நடிகராக இருந்துவருபவர், நடிகை கியாரா அத்வானி. தெலுங்கில் ’பாரத் அனே நேனு’ என்ற படம் மூலமும்; இந்தியில் ஃபிக்லி என்னும் படம் மூலமும் டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் அறிமுகமானார், கியாரா அத்வானி.
எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் கியாரா அத்வானி நடித்ததன்மூலம் இந்தியா முழுக்க புகழ்பெற்றார். அதேபோல், அர்ஜூன் ரெட்டியின் இந்தி வெர்ஷனான கபீர் சிங், பூல் புலையா 2, கோவிந்த் நாம் மேரா ஆகியப் படங்களில் நடித்து பரவலாக கவனம் ஈர்த்தார், கியாரா அத்வானி.
தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக, ‘கேம் சேஞ்சர்’படத்தில் நடித்து வருகிறார். நம் தமிழ் இயக்குநர் விஷ்ணுவர்தன் இந்தியில் இயக்கிய ‘ஷெர்ஷா’திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கையில், சித்தார்த்துக்கும் கியாரா அத்வானிக்கும் இடையில் அறிமுகம் கிடைத்துள்ளது. பின் அது நட்பாகி,காதலாக மலர்ந்துள்ளது. 2020ஆம் ஆண்டுமுதல், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த கியாரா அத்வானிக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி 2023ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ஜெய்சல்மர் நகரில் திருமணம் நடைபெற்றது.
அப்படியிருக்க திருமணத்துக்குப் பின்பு, முதன்முதலாக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்நிலையில் தனது நீண்டநாள் காதலரும் கணவருமான சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு, நடிகை கியாரா அத்வானி, லிப்லாக் செய்து பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி, கேக் வெட்டி, பரிசளித்து மகிழ்ந்துள்ளார். இதுதான் சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இதைப் பலர் லைக் செய்தும் ஷேர் செய்தும் தங்களது மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்