‘எல்லாம் அந்த குடியால வந்த வினை.. 2 முறை அறுவை சிகிச்சை செஞ்சும்.. அவன் செத்த செய்திய கேட்டப்ப’ - குஷ்பு கண்ணீர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘எல்லாம் அந்த குடியால வந்த வினை.. 2 முறை அறுவை சிகிச்சை செஞ்சும்.. அவன் செத்த செய்திய கேட்டப்ப’ - குஷ்பு கண்ணீர்

‘எல்லாம் அந்த குடியால வந்த வினை.. 2 முறை அறுவை சிகிச்சை செஞ்சும்.. அவன் செத்த செய்திய கேட்டப்ப’ - குஷ்பு கண்ணீர்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 02, 2025 09:39 PM IST

ராஜீவ் கபூர் இறந்து 3 வருடங்களுக்கு ஆகியும் குஷ்பு சுந்தர் தனது மொபைலில் இருந்து ராஜீவ் கபூரின் போன் எண்ணை நீக்காமல் இருந்தார்

Khushbu Sundar and Rajiv Kapoor became friends during the making of film Ram Teri Ganga Maili.
Khushbu Sundar and Rajiv Kapoor became friends during the making of film Ram Teri Ganga Maili.

திரும்பி பார்த்த குஷ்பு

நடிகரும் அரசியல்வாதியுமான விக்கி லால்வானியுடனான நேர்காணலில் ராஜீவுடனான தனது நட்பு குறித்து மனம் திறந்து பேசிய குஷ்பு, ‘ ‘அவருக்கு இதய பிரச்சினை இருந்தது; இதற்கிடையே அவர் மதுவுக்கு அடிமையாகி விட்டார்; அது அவருக்கு ஒரு பெரிய சிக்கலை உருவாக்கக்கூடும் என்று எங்களுக்குத் தெரியும்; அந்த பழக்கத்தில் இருந்து அவரை வெளியே கொண்டு வர நாங்கள் அரும்பாடுபட்டோம். ஆனால், எந்த முயற்சியும் பலனிக்கவில்லை. உணர்ச்சி ரீதியாக அவர் மிக மிக தாழ்வான இடத்திற்கு சென்று விட்டார்.

அவருக்கு முழங்காலிலும் ஒரு பெரிய பிரச்சினை இருந்தது; எனவே அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆனால் அதுவும் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை; அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது எங்களுக்குத் தெரியும். அவர் இறந்தபோது நான் மும்பையில் இருந்தேன். போனி கபூர்தான் அவரின் மரண செய்தியை என்னிடம் சொன்னார். அவர் என்னை அழைத்து, 'சிம்பு (அழைக்கும் பெயர்) இனி இல்லை' என்று கூறினார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.’ என்று பேசினார்.

அப்படி ஒரு மனுஷனை பார்க்க முடியாது!

ராஜீவ் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு அவருடன் பேசியதை பகிர்ந்த குஷ்பு, ‘அவர் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு நான் சிம்புவுடன் பேசினேன். கோவிட்-19 காலகட்டத்தில் அவருக்கு அதிக காய்ச்சல் இருந்தது; உடல்நிலை சரியில்லாத நிலையிலும், அவர் தனது வழக்கமான சுயத்திலேயே இருந்தார்... அவர் தனது உடல்நிலையை அலட்சியமாக எடுத்துக்கொண்டார், என்னை, விரைவில் சந்திப்பதாக உறுதியளித்தார். அவரது மரணம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு உயிரோட்டமாக, நண்பர்கள் மற்றும் நட்புகளின் மீதான அர்ப்பணிப்பு கொண்டவர்களை அவர் எங்களுடன் இருக்கிறார் என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம்.’ என்று பேசினார்.

ராம் தேரி கங்கா மைலி படத்தில் பணிபுரியும் போதுதான் ராஜீவ் உடன் குஷ்புவிற்கு அதிக நெருக்கம் ஏற்பட்டது. ராஜீவ் இறந்த 3 வருடங்களாக அவரது எண்ணை மொபைலில் டெலிட் செய்யாமல் வைத்திருந்தார் குஷ்பு!

ராஜீவ் மரணம் குறித்து

மறைந்த நடிகரும், தயாரிப்பாளருமான ராஜ் கபூரின் இளைய மகன் ராஜீவ். 2021 ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமான அவருக்கு வயது 58. இவர் மறைந்த நடிகர் ரிஷி கபூர் மற்றும் நடிகர் ரந்தீர் கபூரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

1983 ஆம் ஆண்டில் ஏக் ஜான் ஹைன் ஹம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராஜீவ், ஆஸ்மான் (1984), லவர் பாய் (1985), ஜபர்தஸ்த் (1985) போன்ற பல படங்களில் நடித்தார். இருப்பினும், 1985 ஆம் ஆண்டின் ராம் தேரி கங்கா மைலி பெற்ற புகழை எந்த படமும் தொடவில்லை. இப்படத்தை அவரது தந்தை இயக்கியிருந்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.