'உங்களுக்குள்ள அவ்ளோ அசிங்கம்.. முகத்தக் கூட வெளிய காட்டமாட்டிங்க' ரசிகனின் ட்ரோலுக்கு குஷ்பு பதிலடி
தான் ஊசி செலுத்திக் கொண்டதன் மூலம் தான் உடல் எடையை குறைத்தேன் எனக் கூறிய ரசிகருக்கு குஷ்பு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்து வருபவர குஷ்பு. இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஒல்லியான தேகத்தில் இருந்தாலும் சில ஆண்டுகளாகலே உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அப்போது அவரைக் கிண்டல் செய்யும் விதமாக குஷ்பு இட்லி என்றெல்லாம் கூறுவர். இப்படி பல ட்ரோல்களை சிக்கியவர் சில ஆண்டுகளாகவே தன் உடல் எடையை குறைப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.
ஃபிட்னஸ் குஷ்பு
இதையடுத்து, உடல் மெலிந்து காணப்படும் தன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இப்போது, அதைவிடவும் மெலிதாக சைஸ் ஜீரோ போன்ற உடலமைப்புடன் தான் இருக்கும் புகைப்படதை குஷ்பு தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியடைந்தார். இதனைப் பார்த்து பலர் அலருக்கு தங்களது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் ஒருவர், குஷ்புவின் எடை இழப்பு குறித்தும் அவரை விமர்சித்தும் கமெண்ட் செய்திருந்தார்.
