ஒன்னு நமக்கு கிடைக்கலன்னா அத விட.. சாய் பல்லவியால் சீதா ரோலை இழந்த கே.ஜி.எஃப் நடிகை! - ஓப்பனாக பேசிய ஸ்ரீநிதி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒன்னு நமக்கு கிடைக்கலன்னா அத விட.. சாய் பல்லவியால் சீதா ரோலை இழந்த கே.ஜி.எஃப் நடிகை! - ஓப்பனாக பேசிய ஸ்ரீநிதி!

ஒன்னு நமக்கு கிடைக்கலன்னா அத விட.. சாய் பல்லவியால் சீதா ரோலை இழந்த கே.ஜி.எஃப் நடிகை! - ஓப்பனாக பேசிய ஸ்ரீநிதி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 24, 2025 09:16 PM IST

சாய் பல்லவி ஒரு சிறந்த தேர்வு என்று நான் நினைக்கிறேன். நான் அவரை படத்தில் சீதையாகப் பார்க்க விரும்புகிறேன்; நான் எப்போதும் சொல்வது போல் நாம் விரும்பியது நமக்கு கிடைத்தால் நல்லது. - ஓப்பனாக பேசிய ஸ்ரீநிதி!

அவர் வேறு யாருமல்ல.. கே.ஜி. எஃப் 1,2 படங்களில் நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிதான். இது குறித்து அவர் சித்தார்த் கண்ணனுடனான சமீபத்திய நேர்காணலில் பேசி இருக்கிறார்.

ராமாயணத்திற்கு ஸ்கிரீன் டெஸ்ட்

அந்தப்பேட்டியில் ராமாயணத்தில் சீதையாக நடிக்க ஸ்கிரீன் டெஸ்ட் கொடுத்ததை ஒப்புக்கொண்ட அவர் அது குறித்து பேசினார். அவர் பேசும் போது, ‘இப்போது படப்பிடிப்பு நடந்து வருவதால், என்னால் அதைச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.

ஆம், நான் ராமாயண படக்குழுவைச் சந்தித்து ஸ்கிரீன் டெஸ்ட் கொடுத்தேன். அந்த ஆடிஷனுக்காக மூன்று காட்சிகளில் நடித்தேன். அதற்கு அவர்களிடம் இருந்து பெரிய வரவேற்பு கிடைத்தது. நான் நடித்தது அவர்களுக்கு பிடித்திருந்தது.

யாஷ் ராமாயணம் படத்தில் இருக்கிறார் என்று கேள்விபட்டேன். அந்த நேரத்தில்தான் கே.ஜி.எஃப் 2 படமும் வெளியானது. என்னையும் - யாஷையும் ஒரு வெற்றிகரமான ஜோடியாக பார்த்தார்கள். அதன் பின்னரான ஓரிரு மாதங்களில்தான் இதுவும் நடந்தது. யாஷ் ராவணனாகவும், நான் சீதையாகவும் நடிப்போம். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிர் எதிராய் நடிப்பதை பார்க்கும் மக்களால் அதனை ஜீரணிக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கலாம் .. இல்லாமலும் போகலாம் என்று நினைத்தேன்.

சாய் பல்லவியிடம் கதாபாத்திரத்தை இழந்தது குறித்து ஸ்ரீநிதி

ஆனால், சாய் பல்லவி ஒரு சிறந்த தேர்வு என்று நான் நினைக்கிறேன். நான் அவரை படத்தில் சீதையாகப் பார்க்க விரும்புகிறேன்; நான் எப்போதும் சொல்வது போல் நாம் விரும்பியது நமக்கு கிடைத்தால் நல்லது. ஆனால் கிடைக்காவிட்டால் இன்னும் சிறப்பு. ஏனென்றால் உங்களுக்காக புதிய கதவுகள் திறக்கும்.

ஸ்ரீநிதி ஷெட்டி பற்றி

மிஸ் சூப்பர்நேஷனல் 2016 பட்டத்தை வென்ற ஸ்ரீநிதி கே.ஜி.எஃப்: அத்தியாயம் 1-ல் யாஷுடன் அறிமுகமானார். அந்தப்படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்த பாகத்திலும் அவரே நடித்தார். அந்தப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது. அவர் இப்போது நானிக்கு ஜோடியாக ஹிட்: தி தேர்ட் கேஸ் படத்தில் நடித்திருக்கிறார். சைலேஷ் கொலனு இயக்கியுள்ள இப்படம் மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ராமாயணம் பற்றி

நிதேஷ் திவாரியின் ராமாயணம் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். தற்போது தயாரிப்பில் உள்ள இப்படத்தின் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டிலும், மற்றொன்று 2027 ஆம் ஆண்டிலும் இரண்டு பகுதிகளாக வெளியிடப்படும் என்று பேசப்படுகிறது.