'பிச்சை போட்டவர் நயன்தாரா.. பழிவாங்கணும்ன்னு நெனச்சா பாம்பு கூட தோத்துடும்'- கெட்டவன் டைரக்டர்
நடிகை நயன்தாரா நெல்சனுக்கு சினிமா பிச்சையையும், விக்னேஷ் சிவனிற்கு வாழ்க்கை பிச்சையும் போட்டவர் என கெட்டவன் பட இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் கூறியுள்ளார்.
நடிகை நயன்தாரா சிம்புவை காதலித்து பிரேக் அப் செய்தார். அந்த சமயத்தில் அவர் சினிமாவில் கம் பேக் கொடுக்க நினைத்து வெறிகொண்டு வேலை செய்தார். அந்த சமயத்தில் தான் அவர் பல கதைகளை தேர்வு செய்து நடித்தார். அத்துடன் அவர் கதாநாயகியை மையப்படுத்திய கதையிலும் நடித்து வந்தார்.
பழிவாங்கும் நயன்தாரா
இந்நிலையில், நயன்தாராவின் வெறித்தனமான வேலைக்கும், கதாநாயகிகளை சுற்றி அமையும் படத்திற்கும் காரணம் பழிவாங்கும் செயல் தான். பாம்பு கூட பழிவாங்குமான்னு தெரியாது. . ஆனால் நயன்தாரா முடிவெடுத்தால் அவ்வளவு தான் என கெட்டவன் பட இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து கிங் உட்ஸ் டிவி எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், நயன்தாரா குறித்து பல்வேறு விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
சிம்புவால் போன வாய்ப்பை கொடுத்த நயன்தாரா
நெல்சன் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கி வந்தார். அந்த சமயத்தில் தான் நயன்தாராவுடனும் அவருக்கு பழக்கம் ஏற்படுகிறது. நயன்தாராவுக்கு சிம்புவுடன் பிரேக் அப் ஏற்பட்டது. அதே சமயத்தில் சிம்பு நெல்சன் கூட்டணியில் உருவாகி வந்த படமும் ட்ராப் ஆனது.
இதனால், சிம்புவை பழிவாங்க நினைத்த நயன்தாரா, நெல்சனுக்கு வாய்ப்பு வழங்கினார்,
கோலமாவு கோகிலா வாய்ப்பு
அந்த வாய்ப்பினால் உருவான படம் தான் கோலமாவு கோகிலா. இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன் வேண்டா வெறுப்பாக தயாரித்தது. இந்தப் படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையும் இல்லாமல் இருந்தது. ஆனால், கால்ஷீட் தாண்டிப் போன பின்பும், அதனை நயன்தாரா அட்ஜெட்ஸ் செய்து, பணம் கிடைக்கும் போதெல்லாம் படம் எடுக்க உதவி, தன் முயற்சியால் நெல்சனுக்கு வெற்றியை வழங்கினார். இதனால் தான் தற்போது நெல்சன் கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக உள்ளார்.
நயன்தாரா போட்ட பிச்சை
இதனால் நெல்சனுக்கு சினிமாவில் நயன்தாரா போட்ட பிச்சை தான் அவரை முன்னேற்றி உள்ளது. அதோபோலத்தான் விக்னேஷ் சிவனுக்கு வாழ்க்கை பிச்சை போட்டார். அதனால் தான் விக்னேஷ் சிவன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு போனார். இது வேறு இது வேறு. விக்னேஷ் சிவனுக்கு வாழ்க்கை கொடுத்தது அன்பு மற்றும் காதலால் தான்.
கோபி நயினாருக்கு வாய்ப்பு
ஏற்கனவே நயன்தாராவை கஜினி படத்தின் கதாநாயகியாக கமிட் செய்து ஏ.ஆர். முருகதாஸ் சைட் கேரக்டர் போல நடிக்க வைத்தார். அந்த ஆத்திரம் தாங்காமல் இருந்த அவர் வல்லவன் படத்தின் மூலம் பதிலடி தந்தார். இருந்தாலும் கோவம் தீராத அவர், கத்தி படத்தின் கதை பிரச்சனையில் சிக்கியதை பயன்படுத்திக் கொண்டார்.
கத்தி படத்தின் கதை தன்னுடையது என இயக்குநர் கோபி நயினார் வாதாடியதை பிடித்துக் கொண்ட நயன்தாரா, அவரை அழைத்து பேசி அறம் படத்தை எடுக்க வாய்ப்பு வழங்கினார். இந்தப் படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்தார்.
பாம்பு பழிவாங்குமான்னு தெரியாது .. ஆனா!
இந்தப் படத்தின் மூலம் நயன்தாரா கூறுவது என்ன என்றால் உன்னால் ஏமாற்றப்பட்டவருக்கு நான் வாழ்க்கை தருவேன் என்பதைத் தான், என்னை சைடு கேரக்டராக நீங்கள் நடிக்க வச்சீங்க. ஆனா நான் பலபேருக்கு வாழ்க்கையே கொடுப்பேன் என்றார்.
பாம்பு பழிவாங்குமான்னு தெரியாது. ஆனா நயன்தாரா நெனச்சாலே அது முடிஞ்சு போச்சு. நயன்தாரா ஒரு விஷயத்த செய்யணும்ன்னு நெனச்சா அத யாராலையும் தடுக்க முடியாது என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்