‘நயன்தாரா சிம்பு விளையாடிய கிரவுண்ட்ல நான் விக்கெட் கீப்பர்..’ டைரக்டர் நந்தகுமார்
நயன்தாரவும் சிம்புவும் பழகுனத கூட இருந்து பாத்ததுனால இப்போ இந்த நிலைமையில இருக்கேன் என இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. இவர் அத்திரி புத்திரி கத்திரிக்கா எனும் பாடல் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இதையடுத்து அவர் சந்திரமுகி, கஜினி போன்ற படங்களில் கமிட்டாகி கோலிவுட்டின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக மாறி இருந்தார்.
வைரலான சிம்பு நயன்தாரா காதல்
அந்த சமயத்தில் தான் இவருக்கு நடிகர் சிம்புவுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அந்த சமயத்தில் இவர்கள் போகும் இடங்களில் எல்லாம் புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டும் வந்தனர். நாளிதழ்களிலும் பத்திரிகைகளிலும் நயன்தார- சிலம்பரசன் காதல் விவகாரம் தான் பேசுபொருளாகவே அமைந்தது.
ஷீட்டிங், விருது நிகழ்ச்சி, பார்ட்டி என எல்லா இடங்களிலும் ஒன்றாக இருந்த இவர்கள் திடீரென பிரேக் அப் செய்தனர். அதற்கான காரணங்கள் இன்று வரை சரியாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில், அவர்கள் எப்படி காதலித்தார்கள், எங்கு பிரேக் அப் ஆனது என்பது குறித்து கிங்உட்ஸ் டிவி எனும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் கெட்டவன் பட இயக்குநர் நந்தவனம் நந்தகுமார்.
லிப் லாக் நன்றிக்கடனுக்காக காதல்
அந்தப் பேட்டியில், கஜினி படத்தில் ஏ. ஆர். முருகதாஸ் தன்னை முக்கிய கதாநாயகியாக படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி ஏமாற்றி விட்டார் என நயன்தாரா வல்லவன் பட ஷூட்டிங்கின் போது சிம்புவிடம் மிகவும் புலம்பினார். அதனால் தான் ஒரு லிப் லாக் போட்டாவை படத்தின் போஸ்டராக உடனடியாக வெளியிட்டு நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தினார்.
அந்த லிப் லாக் போட்டோவின் நன்றிக் கடனாகத்தான் நயன்தாரா சிம்புவை காதலித்து வந்தார். அந்த சமயத்தில் நான் ஆரம்பத்தில் இருந்தே சிம்புவோட பழகிட்டு இருக்கேன். நான் ஒருபக்கம் சிம்புவோட பழகிட்டு இருக்கேன். நயன்தாராவோட பழக்கமும் ஒருபக்கம் வளர்ந்துட்டே போகுது.
ரொம்ப மோசமா பேசுவாரு
அந்த சமயத்துல நம்மள பத்தின நல்ல ஒப்பீனியனே அவங்க வைக்குறது இல்ல. சிம்பு என் அழகுக்கு நயன்தாரா என்கிட்ட மயங்கி வந்துடும்ன்னு நெனச்சாரான்னு தெரியல. நயன்தாராகிட்ட எப்போவும் என்ன ரொம்ப மோசமா தான் பேசி வச்சிட்டு வந்தாரு.
நாங்க எல்லாம் ஹைதராபாத் போயிருந்த சமயத்துல ஒரு சம்பவம் நடந்துச்சு. அதுக்கு அப்புறம் நாங்க ரெண்டு பேரும் பேசிக்கவே முடியாதபடி ஆகிடுச்சு. அந்த இடத்துல நான், சிம்பு, நயன்தாரான்னு 3 பேர் தான் இருக்கோம். அங்க நடந்த விஷயத்த எங்கயும் வெளிய சொல்ல முடியாத நிலை.
ஹைதராபாத்தில் நடந்த சம்பவம்
நயன்தாரா ஒரு படத்தோட ஷூட்டிங்காக ஹைதராபாத் போயிருக்காங்க. அவர பாக்க சிம்பு போனாரு. அவரோட நான் போனேன். அங்க நடந்த சம்பவத்துக்கு நான் தான் காரணமா ஆகிட்டேன்.
அந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் தான் நான் காரணம். ஆனாலும் அது எதார்த்தமா நடந்தது. ஆனா, ஒரே ஒரு பூ கிடைச்சதை மத்த பூவோட வச்சி மாலையா கட்டி என்ன கெட்டவன்னு முத்திரை குத்திட்டாங்க. இதுக்காக மன்னிப்பு கேட்க முயற்சி பண்ணியும் எதும் நடக்கல.
நயன்தாரா சிம்புக்கு நான் விக்கெட் கீப்பர்
நயன்தாராவும் சிம்புவும் கிரவுண்ட்ல பேட்டர், பவுலராக இருந்த சமயத்துல நான் தான் விக்கெட் கீப்பராக இருந்தேன். வெளிய இருந்த யாருக்கும் இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடந்ததுன்னே தெரியாது.
இங்க பிரச்சன என்னென்னா கூடவே இருந்ததால எனக்கு கெட்டவன்னு முத்திரை குத்தி சினிமாவுல எந்த வாய்ப்பும் கிடைக்காம போயிடுச்சி.
நெல்சனுக்கு கிடைத்த வாய்ப்பு
சில சமயம் கூட இருக்கவங்களுக்கு வாய்ப்பே குடுக்க மாட்டாங்க. எங்கயோ இருக்குறவங்களுக்கு தேடித்தேடி போய் வாய்ப்பு கொடுப்பாங்க. நயன்தாரா கூடவே இருந்து நான் எல்லாத்தையும் பாத்ததால எனக்கு அவங்க எந்த வாய்ப்பும் கொடுக்கல. நெல்சனுக்கு அது எதுவும் தெரியாததால வாய்ப்பு கிடைச்சது.
நெல்சனோட கிராண்ட் உப்புமா படமான கோலமாவு கோகிலாவுக்கு புரொடியூசரே படம் பிளாப் ஆக பல முயற்சி பண்ணியும் நயன்தாரா முட்டு கொடுத்தாரு எனக் கூறியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.