Market Value Actors: மக்கள் எத போட்டாலும் தின்னுவாங்கன்னு நெனப்பு.. நடிகர்கள் எல்லாம் மோசம்..
Market Value Actors: சினிமா ரசிகர்கள் எல்லாம் எத போட்டாலும் தின்னுவாங்கன்னு நெனப்புல மார்க்கெட் வேல்யூ நடிகர்கள் எல்லாம் நெனக்குறாங்க என டைரக்டர் நந்தகுமார் குற்றம்சாட்டியுள்ளார் .

Market Value Actors: இன்றைய தமிழ் சினிமாவில், நடிகர்களிடம் கதை சொல்வது மிகவும் கஷ்டம் அவர்களின் மனநிலை எல்லாம் மிக மோசமாக இருப்பதாக கெட்டவன் படத்தின் இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் கிங் உடஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பில்டப் பண்ணி தான் பேசணும்
நடிகர்கள் பலபேரு நாம சினிமாவுல நடிக்குறதால உண்மையான ராஜான்னே அவங்கள நெனச்சிட்டு இருக்காங்க. அவங்ககிட்ட நீங்க ஒரு பிச்சைக்காரனா நடிக்கிறீங்களான்னு கேட்ட அவங்க ஒத்துக்க மாட்டாங்க.
அவங்ககிட்ட கதை சொல்லும் போதே நீங்க ஒரு ராஜா சார். நீங்க பிச்சைக்காரன் வேஷம் போட்டுட்டு இருக்கீங்கன்னு அவங்கள பில்டப் பண்ற மாதிரி நாம பேசனும்.
யாரு மூஞ்சும் செட் ஆகல
இப்போ நாம பிச்சைக்காரன பத்தி படம் எடுத்தா கூட கடைசியில அவர பணக்காரனா தான் கட்டணும். இது மாதிரி தான் எல்லாரும் எதிர்பாக்குறாங்க. இதையே எதிர்பாத்து எதிர்பார்த்து பல நடிகர்கள் அழிஞ்சே போயிட்டாங்க. அவங்க மனசுக்குள்ள இருக்க ராஜா ஆசைய நம்ம மூலமா படமா எடுக்க சொல்லி உயிர வாங்குவாங்க. ஆனா சிவாஜிக்கு அப்புறம் வேற யாருக்கும் ராஜா மூஞ்சி செட் ஆக மாட்டீங்குது.
கதை சொல்ல ஆரம்பிக்கும் போதே, சத்யராஜ் படத்துல கதை சொல்ற மாதிரி, அந்த குழந்தையே நீங்க தான் மாதிரி தான் எல்லாருக்கும் இருக்கும். இங்க நிறைய நல்ல கதை வச்சிருக்க எவ்வளவோ அசிஸ்டன்ட் டைரக்டர் இருக்காங்க.
போட்டத திங்கனும்
அவங்ககிட்ட யாரும் கதை கேக்கல. உன் கிட்ட புரொடியூசர் இருக்காரா இல்ல ஹீரோ கால்ஷீட் இருக்கான்னு தான் கேக்குராங்க. அந்த டைரக்டர நம்பி பணம் போடுறதுக்கு ஆள் இருந்தா தான் படம். இங்க நல்ல கதை எல்லாம் படம் ஆகாது.
இங்க பெரிய பெரிய ஹீரோக்கள் எல்லாம் அவங்களுக்கான மார்க்கெட் வேல்யூவை கிரியேட் பண்ணி வச்சிருக்காங்க. அந்த மார்கெட்ல எத போட்டாலும் அவங்க ரசிகர்கள் தின்னுவாங்கன்னு அவங்களுக்கு தெரியும். மக்களுக்கும் வேற வழி இல்ல. தியேட்டர்ல அவங்க படம் ரிலீஸ் ஆச்சுன்னா போய் பாக்க வேண்டியது அவங்க விதி.
டிமாண்ட் இருந்தா வேற மாதிரி
பெரிய பெரிய நடிகர்கள் கூட இல்ல. சின்ன சின்ன கேரக்டர் ஆர்டிஸ்ட் கூட நான் இந்த கேரக்டர்ல நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டு இருக்காங்க. ஏன் அஞ்சலி எவ்ளோ பெரிய படம். அந்த படத்துல மோகன் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. ஒரு குழந்தைக்கு அப்பாவா நடிச்சா என் இமேஜ் போயிடும்ன்னு சொல்றாரு. ஆனா, காசு கொடுத்த நடிச்சிருப்பாங்க. அவரே தான் விஜய்யோட கோட் படத்துல அப்பா கேரக்டர்ல நடிச்சிருப்பாரு.
எல்லாரும் இப்படி தான்
காரணம் என்னென்னா அவருக்கு வாய்ப்பு இல்ல. அவரு வாய்ப்பு இருந்தா ராஜாவா தான் நடிப்பேன்னு சொன்னலரு. இப்போ வாய்ப்பு இல்லன்னதும் நாயா கூட நடிக்க வருவாங்க. டிமாண்ட் இருக்க வரைக்கும் தான் இவங்களோட ஆட்டம் எல்லாம். டிமாண்ட் போயிடுச்சுன்னா என்ன கேரக்டரா இருந்தாலும் நடிக்க வந்துடுவாங்க. சினிமாக்காரங்க எல்லாருமே இதே மாதிரி தான்" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்