'சிம்பு சில்லறைய பிச்சையா போட்டுட்டு வாழ்க்கையவே எடுத்துட்டாரு..' கொதிக்கும் கெட்டவன் டைரக்டர்
நடிகர் சிம்பு தனக்கு சில்லறைகளை பிச்சையாக போட்டுவிட்டு வாழ்க்கையையே எடுத்துவிட்டார் என கெட்டவன் படத்தின் இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் கூறினார்.
நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகி பாதியில் நின்ற படங்கள் ஏராளம். அதில் பெயர் சொல்லும்படி முக்கியமான படம் என்றால் அது கெட்டவன். இந்தப் படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில், படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இந்தப் படம் பாதியிலேயே கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் இந்தப் படத்தின் போஸ்டர் ஏற்படுத்திய தாக்கத்தால் பலரும் இப்படத்தை மீண்டும் எடுக்க தயாராக இருக்கிறீர்களா என இயக்குநரிடம் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கெட்டவன் படம் குறித்தும், சிம்பு குறித்தும் இயக்குநர் நந்தவனம் நந்தகுமார் கிங்உட்ஸ் டிவி என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சிம்பு செய்த உதவி
அந்தப் பேட்டியில், "2010ல எனக்கு கல்யாணம் ஆச்சு. 2017ல எனக்கு குழந்த பொறந்தது. அந்த சமயத்துல எனக்கு ஹாஸ்பிடல் செலவு எல்லாம் இருந்தது. அதுனால எல்லார்கிட்டயும் காசு கேட்டுட்டு இருந்தேன். அப்போ நான் சிம்புவோட மேனஜர்கிட்டயும் காசு கேட்டேன். அவர் அத சிம்புகிட்ட சொல்றாரு.
அந்த சமயத்துல ஹாஸ்பிட்டல் பில் 50 ஆயிரத்த சிம்பு தான் கொடுத்தாரு. அத நான் பத்திரிகைல கூட சொன்னேன். ஒரு படம் எடுக்க ஆரம்பிச்சு நின்னு போச்சு. ஆனா அத பத்தின கோவமோ வன்மமோ கொஞ்சம் கூட இல்லாம எனக்கு உதவி செஞ்சாரு. எதிர்பாக்காம கிடைச்ச உதவிய மறக்கவே முடியாது.
கெட்டவன் கிளைமேக்ஸ் டயலாக்
அதுக்கு அப்புறம் ஒரு 15 நாள் கழிச்சு சிம்பு கால் பண்ணி, என்ன பண்றிங்கன்னு கேட்டாரு. நான் சும்மா தான் இருக்கேன். நீங்க வேணும்ன்னா சொல்லுங்க. நாம திரும்பவும் சேந்து கெட்டவன் படம் பண்ணலாம்ன்னு சொன்னேன். அப்போ இல்ல இல்ல நாம அந்த படத்த பண்ணுவோம். எனக்கு கெட்டவன் படத்தோட கிளைமாக்ஸ் டயலாக்க மட்டும் சொல்லுங்கன்னு சொன்னாரு. அப்போ அத ரெக்கார்டு பண்ணிக்குறேன்னும் சொன்னாரு. அடுத்த நாளு மறுபடியும் கால் பண்ணி, அந்த டயலாக்க எழுதி அனுப்ப சொன்னாரு.
படத்தோட உயிரையே எடுத்துட்டாரு
நான் என்ன ஏதுன்னு கேக்காம அவர் சொன்னது எல்லாத்தையும் செஞ்சிட்டு அதுக்கு அப்புறம் எதுக்காக இந்த டயலாக் வேணும்ன்னு கேட்டேன். அப்போ சொல்றாரு. நான் அன்பானவன் அடங்காதவன் அசராதவன்னு ஒரு படம் பண்றேன். அந்த படத்துல நானும் ஜி.வி. பிரகாஷூம் சேர்ந்து பேசுற மாதிரி ஒரு சீன் வருது. அதுக்கு இது நல்லா இருக்கும்ன்னு நினைக்குறேன்னு சொல்றாரு.
அப்போ நான் சொல்றேன். இது கெட்டவன் படத்தோட முழு மூச்சா நிக்குற டயலாக். அந்த லைன் எல்லாம் எடுத்துட்டா அந்த படமே பண்ண வேணாம்ங்குற நிலைமைக்கு போயிடும்ன்னு சொல்றேன். அதுமட்டும் இல்லாம அந்த படத்துல அந்த டயலாக் வந்து செட்டும் ஆகல.
சில்லறைய போட்டு நோட்ட எடுத்துட்டாரு
நான் இங்க பிச்ச போட்டுட்டு இருக்கேன். சிலபேர் எனக்கு சில்லறையும் போடுறாங்க. சில பேர் ரூபா நோட்டும் போடுறாங்க. இங்க சிம்பு என்கிட்ட சில்லறைய போட்டுட்டு ரூபாய் எல்லாத்தையும் எடுத்துட்டு போயிட்டாரு.
அதாவது எனக்கு 50 ஆயிரம் பணத்த குடுத்துட்டு என் வாழ்க்கைய எடுத்துட்டாரு. அப்பறம் எப்படி எனக்கு அவர் மேல நன்றி விஸ்வாசம் எல்லாம் வரும்" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.