கேரள சினிமாவில் தொடரும் போதைப் பொருள் பயன்பாடு.. ஹைபிரீட் கஞ்சாவுடன் சிக்கிய பிரபல இயக்குநர்கள்..
ஹைபிரீட் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட இயக்குநர்கள் கலீத் ரஹ்மான், அஷ்ரஃப் ஹம்சாவை கேரள ஊழியர்கள் சம்மேளனம் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

கேரள சினிமாவில் தொடரும் போதைப் பொருள் பயன்பாடு.. ஹைபிரீட் கஞ்சாவுடன் சிக்கிய பிரபல இயக்குநர்கள்..
கேரளாவில், பிரபல மலையாள சினிமா இயக்குநர்கள் கலீத் ரஹ்மான் மற்றும் அஷ்ரஃப் ஹம்சா ஆகியோர் போதைப் பொருள் வைத்திருந்ததாக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ஹைபிரீட் கஞ்சாவுடன் சிக்கிய இயக்குநர்கள்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கொச்சியில் உள்ள கோஸ்ரீ பாலத்திற்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையின் போது பிரபல மலையாள சினிமா இயக்குநர்கள் கலீத் ரஹ்மான் மற்றும் அஷ்ரஃப் ஹம்சா ஆகியோர் ஹைபிரீட் கஞ்சா வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இயக்குநர்கள் இரண்டு பேரையும் அவர்களுடன் ஷாலிப் முகமது என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 1.6 கிராம் ஹைபிரீட் கஞ்சாவை மீட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.