Kerala Box Office : கேரள சினிமாவின் போதாத காலம்: 2025ல் 17 படங்கள் ரிலீஸ் ஆகி 11 தோல்வி!
"எல்2: எம்புரான்" போன்ற படங்கள் மலையாள சினிமாவை மீண்டும் உயர்த்தும் என நம்பப்படுகிறது. சிறந்த படைப்புகளுக்கு பெயர் போன மலையாளத் திரைப்படங்கள், சமீபத்தில் தமிழ், தெலுங்கு போன்ற கமிர்ஷியல் படங்களிலும் களமிறங்கியுள்ளன. இதுவும் பின்னடைவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

மலையாள திரைப்படங்கள் சமீபத்தில் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் சவால்களை சந்தித்துள்ளன. 2025 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெளியான 17 படங்களில் 11 படங்கள் பெரிய தோல்விகளை சந்தித்தன, மேலும் மொத்தமாக 75.23 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படங்கள், கேரளாவில் வெறும் 23.55 கோடி ரூபாய் மட்டுமே திரையரங்கப் பகிர்வாக பெற்றன.
வெற்றியடைந்த சில திரைப்படங்கள்
ஆனால், சில படங்கள் வெற்றியடைந்தன. உதாரணமாக, "ஆபிஸர் ஆன் டியூட்டி" படம் கேரளாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேலும், "ரேகாசித்திரம்" போன்ற படங்கள் உலகளாவிய அளவில் நல்ல வசூலை பெற்றுள்ளன. இருப்பினும் பெரும்பாலான படங்கள், நினைத்த வசூலை பெறவில்லை.
இந்த நிலைமையை மாற்ற, எதிர்பார்க்கப்படும் "எல்2: எம்புரான்" போன்ற படங்கள் மலையாள சினிமாவை மீண்டும் உயர்த்தும் என நம்பப்படுகிறது. சிறந்த படைப்புகளுக்கு பெயர் போன மலையாளத் திரைப்படங்கள், சமீபத்தில் தமிழ், தெலுங்கு போன்ற கமிர்ஷியல் படங்களிலும் களமிறங்கியுள்ளன. இதுவும் பின்னடைவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
கேரள பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
- ரேகாசித்திரம்: ரூ.26.85 கோடி வசூலுடன் கேரளாவில் முன்னணி இடத்தில் உள்ளது.
- ஆபிசர் ஆன் ட்யூட்டி: ரூ.29.05 கோடி வசூலுடன் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது
- பொன்மான்: ரூ.10.50 கோடி வசூலுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- டொமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்: ரூ.9.60 கோடி வசூலுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க | Ajith Kumar: மீண்டும் மேடை.. மீண்டும் வெற்றி.. ஆச்சரியத்தில் கோலிவுட்!- 3 வது இடத்தை பிடித்து சாதனை படைத்த அஜித்குமார்!
ஏப்ரல் 2025-ல் மலையாள சினிமா ரசிகர்களை கவரும் பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவற்றில் முக்கியமானவை சில:
- லவ்லி: ஏப்ரல் 4, 2025 அன்று Manoj K Jayan நடிப்பில் வெளியாகிறது.
- ஆஜாதி: ஏப்ரல் 9, 2025 அன்று வெளியாக உள்ளது.
- பஜூகா: Mammootty மற்றும் Gautham Vasudev Menon இணைந்து நடித்துள்ள படம், ஏப்ரல் 10, 2025 அன்று வெளியாகிறது.
- மரண மாஸ்: ஏப்ரல் 10, 2025 அன்று வெளியாக உள்ளது
- வம்பதி: சுவாஸிகா நடிப்பில் ஏப்ரல் 11, 2025 அன்று வெளியாக உள்ளது
- ஒட்டகொம்பன்: ஏப்ரல் 11, 2025 அன்று வெளியாக உள்ளது
மேலும் படிக்க | Good Bad Ugly: கிளுகிளுப்புக்கு கிடாவெட்டு.. மண்டையை கழுவிய அஜித்! - ஆதிக் இப்படி மாறிப்போனது ஏன்?
வெளியாகும் திரைப்படங்கள், மலையாள சினிமாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
குறிப்பு: இந்த தகவல்கள் அனைத்துsார imdb உள்ளிட்ட இணையதளங்களின் உள்ளீடுகளை கொண்டு உருவான தகவல் ஆகும். இதன் உண்மை தன்மைகளுக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பொறுப்பாகாது.

டாபிக்ஸ்