Kerala Box Office: கேரளாவில் அடிச்சு தூக்கிய தமிழ் திரைப்படங்கள்.. இந்த 3 படங்கள் தான் இப்போதும் டாப்!
Kerala Box Office: தனித்துவமான படைப்புகளுக்கு பெயர் போன கேரளாவில், தமிழ் சினிமாவின் மசாலா ட்ரீட், அவர்களுக்கு அப்போதிருந்தே பிடிக்கும். அது தான், இன்றும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.

Kerala Box Office: கேரளாவும் தமிழ்நாடும் திரை உலகில் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் என்று சொல்லலாம். மொழி வேறு என்றாலும், அங்குள்ள நடிகர், நடிகைகளை இங்கு இருப்பவர்கள் ரசிப்பதும், இங்குள்ள நடிகர், நடிகைகளை அங்குள்ள ரசிகர்கள் ரசிப்பதும் காலம் காலமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு விதித்த பின், பெரும்பாலாவ காலை காட்சிகள், கேரளாவிலும், ஆந்திராவிலும திரையிடப்படுகிறது. இதனால் மலையாள, தெலுங்கு ரசிகர்களுடன் இணைந்து தமிழ் ரசிகர்களும் அங்குள்ள திரையங்களுக்கு படையெடுக்கின்றனர். தமிழ்நாட்டைப் போலவே, இன்னும் சொல்லப் போனால், தமிழ்நாட்டை விட அதிக அளவில் கொண்டாட்டங்கள், கேரளாவில் ரிலீஸ் படங்களுக்கு கிடைக்கிறது.
இந்த கட்டுப்பாடுகளுக்கு முன்பே, கேரளாவில் தமிழ் சினிமாக்களுக்கான வரவேற்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இப்போது அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் கேரளாவில் அதிக வசூலை குவித்த தமிழ் திரைப்படங்கள் எவை? அவற்றில் வசூல் என்ன? இங்கே காணலாம்:
விக்ரம்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் நடித்த இந்த திரைப்படம் கேரளாவில் ரூ.40.1 கோடி வசூல் செய்து முதல் இடத்தை பிடித்தது.
பொன்னியின் செல்வன்:
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ரவி மோகன், கார்த்தி, த்ரிஷா நடித்த இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இருப்பினும் முதல்பாகம் பெரிய அளவில் வசூல் பெற்று, கேரளாவில் இந்த திரைப்படம் ரூ.24.15 கோடி வசூல் செய்தது.
பிகில்:
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்த இந்த திரைப்படம், ரூ.19.80 கோடி வசூல் செய்து கேராளவில் வெளியாகி அதிக வசூல் பெற்ற திரைப்படமாக மூன்றாவது இடத்தில் உள்ளது.
வரிசைபடுத்தலில் இவை முறையே மூன்று இடங்களை பிடித்தாலும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா இயக்கிய லியோ திரைப்படமும் கேரளாவில் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது. தனித்துவமான படைப்புகளுக்கு பெயர் போன கேரளாவில், தமிழ் சினிமாவின் மசாலா ட்ரீட், அவர்களுக்கு அப்போதிருந்தே பிடிக்கும். அது தான், இன்றும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது.
