ரவி மோகனின் காதலி கர்ப்பமா? வைரல் புகைப்படத்திற்கு கெனிஷாவின் பதில் என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரவி மோகனின் காதலி கர்ப்பமா? வைரல் புகைப்படத்திற்கு கெனிஷாவின் பதில் என்ன தெரியுமா?

ரவி மோகனின் காதலி கர்ப்பமா? வைரல் புகைப்படத்திற்கு கெனிஷாவின் பதில் என்ன தெரியுமா?

Malavica Natarajan HT Tamil
Published Jun 10, 2025 09:36 AM IST

நடிகர் ஜெயம் ரவியின் காதலி கெனிஷா பிரான்சிஸ் கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக வெளியான ஒரு புகைப்படம் வைரலான நிலையில், கெனிஷா அதற்கு பதிலளித்துள்ளார்.

ரவி மோகனின் காதலி கர்ப்பமா? வைரல் புகைப்படத்திற்கு கெனிஷாவின் பதில் என்ன தெரியுமா?
ரவி மோகனின் காதலி கர்ப்பமா? வைரல் புகைப்படத்திற்கு கெனிஷாவின் பதில் என்ன தெரியுமா?

கெனிஷா கர்ப்பம்?

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி ரவியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் ரவி மோகன் உறவில் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் சமீபத்தில் வதந்திகள் பரவின.

விளக்கமளித்த கெனிஷா

மேலும் ரவிக்கும், ஆர்த்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு கெனிஷா தான் காரணம் என்றும் ஆர்த்தியுடன் இணைந்து பலரும் குற்றம் சாட்டினர். இது குறித்து பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த பேட்டியில் கெனிஷா காட்டமாக பதிலளித்துள்ளார். அத்துடன், ஜெயம் ரவியுடன் தனக்கு இருக்கும் தொடர்பு குறித்து வரும் பல்வேறு கருத்துகள், வதந்திகள் குறித்தும் கெனிஷா பேசினார்.

அதற்கு கூட அனுமதி வேண்டுமா?

'ஹோப்' என்ற குறிப்புடன் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து தான் கர்ப்பமாக இருப்பதாக தவறாக புரிந்து கொண்டதாக கெனிஷா விளக்கினார். ஹோப் என்பது தனது பாடல் 'அன்றும் இன்றும்' என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் என்றும், சிலர் தவறாக கர்ப்பம் என்று நினைத்துக் கொண்டனர். அன்று தனது கைகளை கட்டிக் கொண்டு நின்றதால் அனைவரும் தவறாக நினைத்துக் கொண்டனர். "எனக்கு சிக்ஸ் பேக் இல்லை. அதனால் நான் கர்ப்பமாக இருப்பதாக கூறுகின்றனர். நான் கைகளை கட்டிக்கொள்ள கூட அனுமதி வேண்டுமா?" என்று அவர் கேட்டார்.

இதை செய்யக் கூடாது என இருக்கிறேன்

தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் இதே பேட்டியில் அவர் பேசினார். "நான் தேவதை இல்லை. அதேசமயம் நான் பேயும் இல்லை என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது ஒரு ராபிட் ஹோல் போன்றது. ஒரு வதந்தி மற்றொன்றுக்கு வழிவகுக்கும். இதை சரி செய்ய நேரம் இருக்கிறது. என்னால் முடியும். ஆனால் செய்யக்கூடாது என்று முடிவு செய்துள்ளேன்" என்று அவர் கூறினார்.

ரவி மோகன்- கெனிஷா

ரவி, ஆர்த்தி விவாகரத்தில் கெனிஷாவின் பெயர் அடிபட்டபோது அவர் செய்திகளில் இடம் பிடித்தார். ஆனால் அந்த நடிகர் தனக்கு நண்பர், வாடிக்கையாளர் மட்டுமே என்றும் தான் ஒரு ஸ்பிரிச்சுவல் டாக்டர் என்றும் அவர் குறிப்பிட்டார். மே மாதம் இவர்கள் இருவரும் சென்னையில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்து கொண்டனர். அங்கு அவர்கள் இருவரும் தங்க நிற உடையில் காணப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் திருமண வரவேற்புக்கும் ஒன்றாக சென்றனர்.

மாலையும் கழுத்துமாக

சமீபத்தில் குன்றக்குடி கோயிலுக்கு சென்ற பிறகு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்தனர். பாரம்பரிய உடையில், கழுத்தில் மாலைகளுடன் இருந்த அவர்களின் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியாகின. ரவி மோகன், ஆர்த்தி ரவி விவாகரத்து கடந்த ஆண்டு செப்டம்பரில் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியுடன் பிரிந்துவிட்டதாக வந்த வதந்திகளை உறுதிப்படுத்தினார்.

ரவி மோகன்- ஆர்த்தி

இந்த ஜோடி 2009ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரவியின் வெளிப்படையான அறிவிப்பால் தான் அதிர்ச்சியடைந்ததாக ஆர்த்தி கூறினார். கெனிஷாவின் பெயர் அடிபட்டபோது, அவர் ரவிக்கு நண்பர், ஹீலர் என்று தெளிவுபடுத்தினார்.

மே மாதம், ரவி கெனிஷாவுடன் பொதுவெளியில் தோன்றிய பிறகு ரவியும், ஆர்த்தியும் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். இவர்களது விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. அவர் அதிக அளவில் ஜீவனாம்சம் கேட்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.