கெனிஷாவுடன் மாலையும் கழுத்துமாக பூஜை.. பின் ரவி மோகன் எடுத்த புதிய அவதாரம்.. என்ன நடக்கிறது?
நடிகர் ரவி மோகன் புதிய ஸ்டூடியோ ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்ததற்கு முன், அவர் கெனிஷாவுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கெனிஷாவுடன் மாலையும் கழுத்துமாக பூஜை.. பின் ரவி மோகன் எடுத்த புதிய அவதாரம்.. என்ன நடக்கிறது?
நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஆகியோர் இணைந்து, ரவி மோகன் ஸ்டூடியோ எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பிற்கு முன் இருவரும் இணைந்து கோவிலுக்குச் சென்ற புகைப்படங்கள் இணையவாசிகளிடம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
வைரலாகும் கெனிஷா- ரவி மோகன்
அந்தப் புகைப்படத்தில், ரவி மற்றும் கெனிஷா கோவில் பூசாரிகளுடன் நின்று போஸ் கொடுத்துள்ளனர். புகைப்படங்களில், இருவரும் மாலை அணிந்து நிற்கிறார்கள். ரவி சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்துள்ளார், அதேசமயம் கெனிஷா குர்தா அணிந்துள்ளார். அவர்கள் தரிசனத்திற்குப் பிறகு பூசாரிகள் மற்றும் கோவில் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். அவர்கள் குன்றக்குடி முருகன் கோவிலில் காணப்பட்டதாக பதிவுகள் கூறுகின்றன.