தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Keerthy Suresh Was Not The First Choice For Nadigaiyar Thilagam

Keerthy Suresh: கீர்த்தி சுரேஷ் இல்ல.. நடிகையர் திலகம் திரைப்படத்தில் நடிக்க இருந்த நடிகை யார் தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Feb 27, 2024 10:36 AM IST

கீர்த்தி சுரேஷ் முன்பு நடிகையர் திலகம் திரைப்படத்தில் நடிக்க இருந்த நடிகை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

'நடிகையர் திலகம் ' படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷின் சினிமா கேரியர் ஜெட் வேகத்தில் உயர்ந்து இளம் முன்னணி நடிகையாக மாறியுள்ளது. அதே போல் இப்படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் , பல இயக்குனர்கள் கதையின் நாயகனாக நடிக்க ஆர்வமாக உள்ளனர். கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்திற்கு நடிகை நித்யா மேனன் தான் முதல் சாய்ஸ் என்பது தெரியுமா ?

Famousfix இன் கட்டுரையின் படி, நித்யா மேனன் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் நித்யா மேனன் அதை நிராகரித்தார். அதே நேரத்தில், நித்யா மேனன் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பளம் உள்ளிட்ட சில காரணங்களால் அவர் படத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷை உறுதிப்படுத்தும் முன் , சாவித்திரி வேடத்தில் அமலா பாலின் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. கீர்த்தி சுரேஷ் பின்னர் லுக் டெஸ்டில் சாவித்திரி கதாபாத்திரத்திற்கு பொருந்தியதால் , நக் அஷ்வின் படத்தை இயக்க முடிவு செய்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படத்தில் துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ராஜேந்திர பிரசாத், பானுப்ரியா மற்றும் என்.டி. ராமராவ், நாக சைதன்யா, மோகன் பாபு, திவ்யா வாணி, ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் உடுள்ளன :

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்