மஞ்சள் கயிற்றை மாற்றுவேன்.. தாலி அணிந்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. நச் பதிலளித்த கீர்த்தி சுரேஷ்!
Keerthy Suresh : தங்க தாலியை மாற்றாமல் மஞ்சள் கயிறுடன் இருந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலளித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ், தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களுக்குப் பிறகு, கீர்த்தி சுரேஷ் அவர் நடித்த பேபி ஜான் படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதைக் கண்ட ரசிகர்கள், திருமணத்திற்கு பின் கீர்த்தி பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் வைரலான நிலையில், நெட்டிசன் அவரது புகைப்படத்தை வைரலாக்கினர், அத்துடன் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பின் பளபளப்பாக காணப்படுகிறார் என்று ஒருதரப்பும், தாலியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றதால், அவர் பாரம்பரியத்தை பின்பற்றுபவர் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
புரொமோஷன் பணிகளில் பிஸியாக கீர்த்தி சுரேஷ்
தென் இந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை, கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு, திருமதி ஆனார். திருமணத்துக்கு பின்னர் இவர் நடித்த முதல் பாலிவுட் படமான பேபி ஜான் ரிலீஸானது. இதையடுத்து திருமணம் முடித்த கையோடு இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருந்த கீர்த்தி சுரேஷ், ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். குறிப்பாக பேபி ஜான் படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் மாடர்ன்ட் ட்ரெஸ் அணிந்து, கழுத்தில் மஞ்சள் நிற கயிறுடன் தாலி அணிந்தவாறு வலம் வந்த கீர்த்தி சுரேஷ், ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
திருமணம் நடந்து எந்தவிதமான கொண்டாட்டத்திலும் ஈடுபடாத கீர்த்தி சுரேஷ், சில தினங்களிலேயே பேபி ஜான் படத்தின் பிரமோஷன்களில் கலந்துக் கொண்டார். வருண் தவான், வமிகா கபி ஆகியோருடன் இணைந்து படத்தின் பிரமோஷன்களுக்காக பல பேட்டிகளையும் கொடுத்திருந்தார்.
மஞ்சள் கயிற்றை அணிந்திருப்பது ஏன்?
இந்த பிரமோஷன்களில் கீர்த்தியின் கெட்டப் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் அவர் கழுத்தில் மஞ்சள் தாலியை அணிந்துக் கொண்டு பிரமோஷன்களில் கலந்துக் கொண்டார். இதையடுத்து அவர் தங்க தாலியை மாற்றாமல் மஞ்சள் கயிறுடன் இருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், “திருமணம் ஆகி 3 வாரங்களுக்கு மேல் ஆகியும் நான் மஞ்சள் கயிற்றை அணிந்திருப்பது குறித்து ஒரு சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். மஞ்சள் கயிற்றை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு அகற்றக் கூடாது என்பதால் அதை தொடர்ந்து அணிந்து இருக்கிறேன். ஜனவரி இறுதியில் நல்ல நாள் வருகிறது. அப்போது மஞ்சள் கயிற்றை மாற்றுவேன். இது புனிதமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. அதனை அணிவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.
கீர்த்தி சுரேஷ் படங்கள்
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக பேபி ஜான் என்ற பாலிவுட் படம் வெளியானது. தமிழில் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெறி படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகியிருக்கும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படம் தவிர 2025இல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில், ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்