திருமணத்துக்கு முன் லிவிங் ரிலேஷன்ஷிப்.. மஞ்சள் கயிறு தாலிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திருமணத்துக்கு முன் லிவிங் ரிலேஷன்ஷிப்.. மஞ்சள் கயிறு தாலிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

திருமணத்துக்கு முன் லிவிங் ரிலேஷன்ஷிப்.. மஞ்சள் கயிறு தாலிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 02, 2025 06:58 AM IST

ப்ளஸ் 2 படிக்கும்போதே ஆண்டனியுடன் டேட்டடிங்கை தொடங்கி, கொரோனா காலகட்டத்தில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஜனவரி வரை மஞ்சள் கயிறு தாலியுடன் தான் இருப்பேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

திருமணத்துக்கு முன் லிவிங் ரிலேஷன்ஷிப்.. மஞ்சள் கயிறு தாலிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் - கீர்த்தி சுரேஷ் ஓபன்
திருமணத்துக்கு முன் லிவிங் ரிலேஷன்ஷிப்.. மஞ்சள் கயிறு தாலிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் - கீர்த்தி சுரேஷ் ஓபன்

ஜனவரி இறுதிவரை அப்படித்தான்

இதையடுத்து பொது நிகழ்ச்சிகளில் மஞ்சள் கயிறுடன் கூடிய தாலி அணிந்தவாறு தோன்றுவது ஏன் என்ற கேள்விக்கு கலாட்டா இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், " திருமணம் ஆன உடனேயே மஞ்சள் கயிறில் அணிந்த தாலியை கழட்டகூடாது. மஞ்சள் கயிறு அணிந்த தாலி திருமணமாகி ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்கு பிறகு மங்களகரமான நாளில் கழிட்டிவிட்டு தங்க செயினில் தாலியை மாற்றி அணிந்து கொள்வது வழக்கம். ஆனால் ஜனவரி இறுதிவரை தாலியை கழட்டி மாற்றுவதற்கான நல்ல நாள் இல்லை. எனவே அந்த நாள் வரை நான் மஞ்சள் கயிறுடன் தாலி அணிவேன்.

மஞ்சள் கயிறு தாலி ஹாட்டாக இருந்தது

சிலர் புரொமோஷனல் நிகழ்ச்சிக்கு வரும் மாடர்டன் உடைகளுடன் இதை அணிந்திருப்பது தேவையில்லை என கூறியதை கேள்விப்பட்டேன். ஆனால் மஞ்சள் கயிறுடன் கட்டப்பட்டிருக்கும் தாலி உங்களது மார்பை ஒட்டி இருக்க வேண்டும். இது மங்களகரமானது மட்டுமல்லாமல் சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. தாலியை தங்க செயினுடன் மாற்றிய பிறகு வெளியே தெரியாதவாறு இருக்கும். இருப்பினும் மாடர்ன் உடையுடன் மஞ்சள் கயிறு காம்பினேஷனின் என்னை பார்க்க மிகவும் ஹாட்டாக இருந்ததாக பலர் கூறியதை பார்த்தேன். இது மகிழ்ச்சி அளித்தது" என்றார்.

ஆர்குட் மூலம் ஏற்பட்ட பழக்கம்

இந்த புத்தாண்டுடன், ஆண்டனி தட்டில் என்னிடம் புரொபோஸ் செய்து 15 ஆண்டுகள் ஆகியிருப்பதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தனது காதல் கணவர் ஆண்டனி தட்டிலுடனான ரிலேஷன்ஷிப் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, "சமூக வலைத்தளமான ஆர்குட் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் முதலில் பேசியது தொடங்கியது நான் தான். ரெஸ்ட்ராண்ட் ஒன்றில் இருவரும் முதல் முறையாக சந்தித்த ஒரு மாதத்துக்கு முன்னாள் நன்கு சாட்டிங் செய்தோம்.

நான் என் குடும்பத்தினருடன் இருந்ததால், அவரை பார்க்க முடியாது. அவர் 2010இல் என்னிடம் புரொபோஸ் செய்தார். 2016க்கு பிறகு எங்களது உறவு தீவிரம் அடைந்தன. அவர் எனக்கு ஒரு மோதிரம் அணிவித்தார். அதை திருமணம் வரை நான் கழட்டியதே கிடையாது. நான் நடித்த படங்களில் கூட நீங்கள் அதை பார்க்கலாம்.

லிவிங் டூ கெதர் வாழ்க்கை

திருமணம் என்கிற கனவு நனவாகிய அந்த தருணம், மனம் நிறைவாக இருந்ததோடு, உணர்வுபூர்வமாக இருந்தேன். நான் ப்ளஸ் 2 படிக்கும்போது இருவரும் டேட்டிங் செய்ய தொடங்கினோம். அவர் என்னைவிட 7 வயது பெரியவர். கத்தாரில் வேலை செய்து கொண்டிருந்தார். எங்களது ரிலேஷன்ஷிப் ஆறு ஆண்டுகள் வரை நீடித்தது.

கொரோனா காலகட்டத்தில் இருவரும் லிவிங் டூ கொதரில் இருந்தோம். எனது சினிமா கேரியருக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அவர் யாராவது அதிர்ஷ்டசாலி என்று சொல்வதை காட்டிலும், நான் தான் அவரை மணமுடித்தில் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்" என்றார்.

கீர்த்தி சுரேஷ் படங்கள்

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக பேபி ஜான் என்ற பாலிவுட் படம் வெளியானது. தமிழில் விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெறி படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகியிருக்கும் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த படம் தவிர 2025இல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில், ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.