இதுவரை இல்லாத அளவில் தாராள கவர்ச்சி.. கோடிகளை அள்ளி கொடுத்த பாலிவுட்டினர்! பேபி ஜானுக்கு கீர்த்தி வாங்கிய தெறி சம்பளம்
இதுவரை இல்லாத அளவில் தாராள கவர்ச்சி காட்டி பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்த கீர்த்தி சுரேஷுக்கு சம்பளமாக கோடிகளை அள்ள தந்துள்ளனராம். ஹிட் படங்கள், திருமணம், பாலிவுட் சினிமா என சந்தோஷம் மேல் சந்தோஷத்துடன் கீர்த்தி சுரேஷுக்கு இந்த ஆண்டு அமோகமாக அமைந்துள்ளது.
![இதுவரை இல்லாத அளவில் தாராள கவர்ச்சி.. கோடிகளை அள்ளி கொடுத்த பாலிவுட்டினர்! பேபி ஜானுக்கு கீர்த்தி வாங்கிய தெறி சம்பளம் இதுவரை இல்லாத அளவில் தாராள கவர்ச்சி.. கோடிகளை அள்ளி கொடுத்த பாலிவுட்டினர்! பேபி ஜானுக்கு கீர்த்தி வாங்கிய தெறி சம்பளம்](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/20/550x309/keerthy_salary_1734679458410_1734679469434.png)
தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும்போது காதலனை கரம் பிடித்து திருமதி ஆகியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதையடுத்து கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் பேபி ஜான் படம் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கிறார்.
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் இல்லாத அளவில் பாலிவுட் படமான பேபி ஜான் படத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதையடுத்து கீர்த்தியின் புதிய அவதாராத்தை பார்ப்பதற்காக படத்தின் ரிலிஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.
கோடிகளில் சம்பளம் வாங்கிய கீர்த்தி சுரேஷ்
தமிழில் சூப்பர் ஹிட்டான தெறி படத்தின் ரீமேக்காக பேபி ஜான் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் அட்லியும் இணைந்து தயாரித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் நெருங்கிய நண்பரான அட்லி, தனது தோழிக்காக பாலிவுட் வாய்ப்பை பெற்று தந்துள்ளார்.
அத்துடன் முந்தைய படங்களில் இல்லாத அளவில் கவர்ச்சியை கொட்டி கொடுத்திருக்கும் கீர்த்திக்கு சம்பளமும் அள்ளி கொடுத்துள்ளாராம். தமிழ், தெலுங்கு படங்களில் ரூ. 2 முதல் 3 கோடி வரை சம்பளமாக பெற்று வந்த கீர்த்தி சுரேஷுக்கு, பேபி ஜான் படத்துக்காக ரூ. 4 கோடி கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெறி படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவான் நடித்துள்ளார். சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். எமி ஜாக்சன் நடித்த கேரக்டரில் வாமிகா கப்பி நடித்துள்ளார்.
ட்ரெண்டான கீர்த்தி சுரேஷ் டான்ஸ்
தெறி படத்தில் சமந்தாவில் ரோல் ஹோம்லியாக இருக்கும். அத்துடன் ஒரு ரெமாண்டிக் மற்றும் பெப்பியான பாடலும் இடம்பிடித்திருக்கும். அந்த வகையில் பேபி ஜான் படத்தில் முதல் சிங்கிளாக வெளியான நைன் மடாக்கா என்ற பாடலில் கீர்த்தியின் கவர்ச்சியுடன், வருண் தவானுடன் இணைந்து அவர் ஆடிய நடனமும் வைரலானது. இந்த பாட்டில் அவர் ஆடிய டான்ஸ் மூவ்மென்ட்களை வைத்து ரசிகர்கள் மட்டுமல்லாமல், பிரபலங்கள் பலரும் ரீல்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து படத்திலிருந்து தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகி, இதுவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தாலியுடன் புரொமோஷனுக்கு வந்த கீர்த்தி
கடந்த 12ஆம் தேதி நடிகை கீர்த்தி சுரேஷ், தனது நீண்ட நாள் காதலன் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்துமுறைப்படி இவர்களின் திருமணம் கோவாவில் நடைபெற்றது. இதன் பின்னர் கிறிஸ்தவ முறைப்படியும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். கீர்த்தியின் திருமண புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
திருமணம் முடிந்த கையோடு மும்பையில் நடைபெற்ற பேபி ஜான் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார் கீர்த்தி. சிவப்பு நிற ஸ்லீவ் லெஸ் பாடிகான் கவுன் அணிந்து பார்ப்பவர்கள் கண்களை கவரும் விதமாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது அவரது கழுத்தில் தாலி இருந்த நிலையில், திருமணத்துக்கு பின் பளபளப்பாக காணப்படும் கீர்த்தி சுரேஷ், தாலியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தான் பாரம்பரியத்தை பின்பற்றுபவர் என்றும் நிருபித்துள்ளார் என அவரது ரசிகர்கள் உச்சி கொட்டினர்.
சிறப்பான ஆண்டு
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ரகு தாத்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இத்துடன் பாலிவுட்டில் அறிமுகம், காதலருடன் திருமணம் என இரட்டை கொண்டாட்டத்தில் இருந்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)