Keerthy Suresh: ‘எங்களுக்குள்ள எதுவுமே மாறல.. அவருதான் பாவம்.. நம் தட்டுல சாப்பாடு இருக்குன்னா அதுக்கு’ -கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh: நம் தட்டில் இருக்கும் அனைத்தும், அவர்கள் நமக்காக செய்தவை; இது நன்றியுணர்வின் திருவிழா. கடந்த சில ஆண்டுகளாக இது எப்போதும் என்னுடைய அணி உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுடன் இந்த கொண்டாட்டம் இருந்திருக்கிறது. - கீர்த்தி சுரேஷ் சிறப்பு பேட்டி!

நடிகர் கீர்த்தி சுரேஷுக்கும், ஆண்டனிக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி திருமணம் நடந்தது; இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில இணையதளத்திற்கு பேட்டிக்கொடுத்தார்.
ஆண்டனிக்கு அது பழகவில்லை
அப்போது பேசிய அவர், “உண்மையைச் சொன்னால், எதுவும் பெரிதாக மாறவில்லை; இந்த கல்யாணத்தின் மூலம் நிறைய கவனம் எங்கள் மீது திரும்பி இருக்கிறது. எனக்கு அது பழகிவிட்டது. ஆனால் ஆண்டனி அப்படி இல்லை. இதுதான் அவருக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.
இந்த திருமணத்தின் மூலமாக, இரு குடும்பங்கள் ஒன்றாக இணைந்திருப்பதுதான் இங்கு இதனை வித்தியாசப்படுத்தி இருக்கிறது. நாங்கள் மிக நீண்ட காலமாக ஒன்றாக இருந்ததால், எங்கள் இருவருக்கும் இடையில் பெரிய மாற்றம் இல்லை; ஆனால், இரு குடும்பங்கள் இணைந்து இருப்பதால், அதன் மூலம் உருவாகும் அழகான நினைவுகள் வித்தியாசமாக இருக்கின்றன.
