தொடங்கிய திருமண வைபோகம்.. பன் கொண்டை, "கிட்டி" பெயர் பொறித்த ஆடை - மணப்பெண்ணாக மாறும் கீர்த்தி சுரேஷ்
திருமண வைபோகம் டிசம்பர் 10ஆம் தேதியே தொடங்கிய நிலையில், மணப்பெண் கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மணப்பெண்ணாக மாறுவதற்கு முன் மேக்கப்புக்கு தயாராக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் டாப் கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த மாதம் கிருஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் பேபி ஜான் படம் மூலம் பாலிவுட் சினிமாவிலும் என்ட்ரி கொடுக்கிறார். இதற்கிடையே தனது நீண்ட நாள் பாய்பிரண்ட் ஆண்டனி தட்டில் திருமணம் செய்து கொண்டு திருமதி ஆக இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் ஜோராக நடைபெற்று கொண்டிருக்கிறது
தொடங்கிய திருமண வைபோகம்
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் திருமணம் டிசம்பர் 12ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஆனால் டிசம்பர் 10ஆம் தேதி முதலே திருமணம் தொடர்பான சடங்குகளும், நிகழ்ச்சிகளும் தொடங்கிவிட்டன. திருமணத்துக்கு முன் ப்ரீ வெட்டிங் ஏற்பாடுகளை புகைப்படமாக நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தனது நண்பர்களில் ஒருவர் பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரியை ரீ-போஸ்ட் செய்திருக்கும் கீர்த்தி சுரேஷ், "கிட்டி" என்ற பெயர் இடம்பிடித்திருக்கும் ரோப் ஆடையை அணிந்திருக்கிறார். அவரது ஹேர் ஸ்டைல் பன் போன்ற ஸ்டைலிலும், மேக்கப்புக்கு ரெடியாக இருக்க, "இதோ, தொடங்கியாச்சு" என்று கேப்ஷன் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரகசியம் காத்த கீர்த்தி
தனது திருமணம் குறித்த தகவல்களை மிகவும் ரகசியம் காத்து வந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்கள். கடந்த சில நாள்களுக்கு முன் கீர்த்தி மற்றும் ஆண்டனி குடும்பத்தினர் கோவாவுக்கு சென்று திருமண வேலைகளை தொடங்கியுள்ளனர். கோவாவுக்கு புறப்பட்ட விமான டிக்கெட்டை பகிர்ந்து தனது திருமணம் குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்களை #KAwedding என்ற ஹேஷ்டாக்குடன் உறுதிபடுத்தினார் கீர்த்தி சுரேஷ்.