‘மாமியார் வீட்டுக்கு போனாலே பொண்ணுக்கு லைஃப் அவ்வளவுதானா?.. வேணும்னா வேலையாள் வச்சுக்கோங்க’ -கீர்த்தி சுரேஷ் பளார்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘மாமியார் வீட்டுக்கு போனாலே பொண்ணுக்கு லைஃப் அவ்வளவுதானா?.. வேணும்னா வேலையாள் வச்சுக்கோங்க’ -கீர்த்தி சுரேஷ் பளார்

‘மாமியார் வீட்டுக்கு போனாலே பொண்ணுக்கு லைஃப் அவ்வளவுதானா?.. வேணும்னா வேலையாள் வச்சுக்கோங்க’ -கீர்த்தி சுரேஷ் பளார்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 03, 2025 10:50 AM IST

கல்யாணம் என்பது இந்த வயதில்தான் செய்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறையெல்லாம் கிடையாது. 40,50, ஏன் 60 வயதில் கூட கல்யாணம் செய்து கொள்ளலாம்.-கீர்த்தி சுரேஷ் பளார்

 ‘மாமியார் வீட்டுக்கு போனாலே பொண்ணுக்கு லைஃப் அவ்வளவுதானா?.. வேணும்னா வேலையாள் வச்சுக்கோங்க’ -கீர்த்தி சுரேஷ் பளார்
‘மாமியார் வீட்டுக்கு போனாலே பொண்ணுக்கு லைஃப் அவ்வளவுதானா?.. வேணும்னா வேலையாள் வச்சுக்கோங்க’ -கீர்த்தி சுரேஷ் பளார்

கல்யாணம் நடந்துவிடும்

இது குறித்து அவர் பேசும் போது, ‘ஒரு பெண் திருமணம் முடிந்து, இன்னொரு வீட்டுக்கு சென்று வாழ்ந்தால், அவள் மேற்படிப்பு படிக்கக்கூடாதா என்ன? பெண்களுக்கு வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் கல்யாணம் நடந்துவிடும்.. அதன் பின்னர் என்ன இருக்கிறது என்கிறார்கள்.

 

அந்தக்கேள்விக்கான அர்த்தம், அதற்கு பின்னர் அந்த பெண்ணுக்கு பெரிதாக வாழ்க்கை கிடையாது என்பது.அது இந்த சமூகமாக முடிவு செய்த விஷயம் தான். கலாச்சாரம் என்கிற பெயரில் உருவான விஷயம்; இது தனிப்பட்ட நபர்களின் தேர்வை பொருத்தது.

கல்யாணம் என்பது இந்த வயதில்தான் செய்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறையெல்லாம் கிடையாது. 40,50, ஏன் 60 வயதில் கூட கல்யாணம் செய்து கொள்ளலாம். இவ்வளவு ஏன் கல்யாணம் செய்து கொள்ளாமல் கூட இருக்கலாம்; அது அவரவர்களின் விருப்பம் சார்ந்தது.

மாமியார் வீட்டுக்குச் சென்றாலே

சிலர் காலையில் தாமதமாக எழும் பெண்களை, இங்கேயே இப்படி தூங்கினால் மாமியார் வீட்டுக்குச் சென்றால் எப்படி காலையில் எழுந்து வேலைகளை செய்வாள் என்று கூறுவார்கள். அதற்கான பின்னணி என்னவென்றால் மாமியார் வீட்டுக்குச் சென்றாலே, பெண்தான் காலையில் எழுந்து எல்லா வேலையையும் கவனிக்க வேண்டும் என்பது; அதற்காக, அந்த வேலைகளை ஆண்களும் கவனிக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. அவர்கள் ஒரு பணியாள் வைத்துக்கொண்டு செய்யலாமே என்பதுதான்.’ என்று பேசினார்.

மகாநதி திரைப்படத்தில் நடித்த பின்னர் தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவம் குறித்தும் கீர்த்தி சுரேஷ் பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!

6மாத காலம் எதுவும் நடக்கவில்லை

அவர் பேசும் போது, ‘மகாநதி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து விட்டது. எல்லோரும் என்னை பாராட்டினார்கள். ஆனால், அதன் பின்னர் ஒரு 6 மாத காலம் எனக்கு பெரிதாக எந்த விஷயமும் நடக்கவில்லை.

அந்த சமயத்தில் நான் ஒரு ஐந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அக்னதவாசி, தானா சேர்ந்த கூட்டம் சாமி 2 மகாநதி சண்டக்கோழி 2... இவைகள் முடிந்த பிறகு எனக்கு ஒரு பிரேக் கிடைத்தது. அந்த பிரேக் உண்மையில் எனக்கு தேவையும் பட்டது.

பணத்தை நான் சரியாக கையாள்பவள் இல்லை

நான் பணத்தை நான் மிகச் சரியாக கையாள்பவள் அல்ல; அந்த சமயத்தில் நிறைய பேருக்கு பணரீதியாக உதவி செய்து இருந்தேன். ஒரு கட்டத்தில் தான் எனக்கு தெரிந்தது; அந்த பணம் எனக்கும் தேவை என்று. மகாநதி திரைப்படம் செய்ததால் நிறைய நல்ல விஷயங்கள் நடந்தாலும், அதன் பின்னர் இயக்குநர்கள் கமர்சியல் படங்களில் என்னை நடிக்க வைக்க தயங்கினார்கள்; இன்னும் சிலர் நான் நடித்தாலே, அதில் எனக்கு அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டுமே என்பதால் என் அருகிலேயே வராமல் இருந்தனர். எனக்கு இந்த பிரச்சினை தெரிந்த உடன் ஒரு வாரத்தில் அதனை சரி செய்ய முயன்றேன்; ஜனவரி மாதத்தில் மரைக்காயர் படத்தில் நான் கமிட்டானேன். நமக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று நான் கேட்டது கிடையாது;

அவர்கள் என்னைப் பற்றி அப்படி நினைக்கிறார்கள் அவ்வளவுதான்;

நான் மிகவும் சோகமாக இருக்கும் பொழுது, நன்றாக சாப்பிடுவேன். காரை எடுத்துக் கொண்டு வெளியே செல்வேன். முக்கியமாக என்னுடைய நண்பர்களோடு பேசுவேன். பொதுவாக மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது யாருடனும் பேசத் தோன்றாது; ஆனால் நான் அப்படியே எதிர்மாறானவள்; எனக்கு ஒன்று என்றால் பத்து பேர் வந்து நிற்பார்கள்; அவர்களோடு நான் என்னுடைய விஷயங்களை பகிர்ந்து கொள்வேன்’ என்று பேசினார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.