‘நான் எந்த தப்பும் பண்ணலயே.. அந்தப்படம் வந்த 6 மாத காலம் ஒருத்தரும் கிட்ட வரல.. ரொம்ப கஷ்டமா ’ - கீர்த்தி சுரேஷ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘நான் எந்த தப்பும் பண்ணலயே.. அந்தப்படம் வந்த 6 மாத காலம் ஒருத்தரும் கிட்ட வரல.. ரொம்ப கஷ்டமா ’ - கீர்த்தி சுரேஷ்

‘நான் எந்த தப்பும் பண்ணலயே.. அந்தப்படம் வந்த 6 மாத காலம் ஒருத்தரும் கிட்ட வரல.. ரொம்ப கஷ்டமா ’ - கீர்த்தி சுரேஷ்

Kalyani Pandiyan S HT Tamil
Jan 03, 2025 08:44 AM IST

இயக்குநர்கள் கமர்சியல் படங்களில் என்னை நடிக்க வைக்க தயங்கினார்கள்; இன்னும் சிலர் நான் நடித்தாலே, அதில் எனக்கு அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டுமே என்பதால் என் அருகிலேயே வராமல் இருந்தனர். - கீர்த்தி சுரேஷ்!

‘நான் எந்த தப்பும் பண்ணலயே.. மகாநதி முடிஞ்சு 6 மாத காலம் ஒருத்தரும் கிட்ட வரல.. ரொம்ப கஷ்டமா ’ - கீர்த்தி சுரேஷ்
‘நான் எந்த தப்பும் பண்ணலயே.. மகாநதி முடிஞ்சு 6 மாத காலம் ஒருத்தரும் கிட்ட வரல.. ரொம்ப கஷ்டமா ’ - கீர்த்தி சுரேஷ்

6மாத காலம் எதுவும் நடக்கவில்லை

அவர் பேசும் போது, ‘மகாநதி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து விட்டது. எல்லோரும் என்னை பாராட்டினார்கள். ஆனால், அதன் பின்னர் ஒரு 6 மாத காலம் எனக்கு பெரிதாக எந்த விஷயமும் நடக்கவில்லை.

அந்த சமயத்தில் நான் ஒரு ஐந்து படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அக்னதவாசி, தானா சேர்ந்த கூட்டம் சாமி 2 மகாநதி சண்டக்கோழி 2... இவைகள் முடிந்த பிறகு எனக்கு ஒரு பிரேக் கிடைத்தது. அந்த பிரேக் உண்மையில் எனக்கு தேவையும் பட்டது.

பணத்தை நான் சரியாக கையாள்பவள் இல்லை

நான் பணத்தை நான் மிகச் சரியாக கையாள்பவள் அல்ல; அந்த சமயத்தில் நிறைய பேருக்கு பணரீதியாக உதவி செய்து இருந்தேன். ஒரு கட்டத்தில் தான் எனக்கு தெரிந்தது; அந்த பணம் எனக்கும் தேவை என்று. மகாநதி திரைப்படம் செய்ததால் நிறைய நல்ல விஷயங்கள் நடந்தாலும், அதன் பின்னர் இயக்குநர்கள் கமர்சியல் படங்களில் என்னை நடிக்க வைக்க தயங்கினார்கள்; இன்னும் சிலர் நான் நடித்தாலே, அதில் எனக்கு அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டுமே என்பதால் என் அருகிலேயே வராமல் இருந்தனர். எனக்கு இந்த பிரச்சினை தெரிந்த உடன் ஒரு வாரத்தில் அதனை சரி செய்ய முயன்றேன்; ஜனவரி மாதத்தில் மரைக்காயர் படத்தில் நான் கமிட்டானேன். நமக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று நான் கேட்டது கிடையாது;

அவர்கள் என்னைப் பற்றி அப்படி நினைக்கிறார்கள் அவ்வளவுதான்;

நான் மிகவும் சோகமாக இருக்கும் பொழுது, நன்றாக சாப்பிடுவேன். காரை எடுத்துக் கொண்டு வெளியே செல்வேன். முக்கியமாக என்னுடைய நண்பர்களோடு பேசுவேன். பொதுவாக மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது யாருடனும் பேசத் தோன்றாது; ஆனால் நான் அப்படியே எதிர்மாறானவள்; எனக்கு ஒன்று என்றால் பத்து பேர் வந்து நிற்பார்கள்; அவர்களோடு நான் என்னுடைய விஷயங்களை பகிர்ந்து கொள்வேன்’ என்று பேசினார்.

முன்னதாக, தென் இந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை, கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு, திருமதி ஆனார். திருமணத்துக்கு பின்னர் இவர் நடித்த முதல் பாலிவுட் படமான பேபி ஜான் ரிலீஸானது.

இதையடுத்து திருமணம் முடித்த கையோடு இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருந்த கீர்த்தி சுரேஷ், ட்ரெண்டிங்கில் இருந்தார்.

குறிப்பாக பேபி ஜான் படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் மாடர்ன்ட் ட்ரெஸ் அணிந்து, கழுத்தில் மஞ்சள் நிற கயிறுடன் தாலி அணிந்தவாறு வலம் வந்த கீர்த்தி சுரேஷ், ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

ஜனவரி இறுதிவரை அப்படித்தான்

இதையடுத்து பொது நிகழ்ச்சிகளில் மஞ்சள் கயிறுடன் கூடிய தாலி அணிந்தவாறு தோன்றுவது ஏன் என்ற கேள்விக்கு கலாட்டா இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதில், " திருமணம் ஆன உடனேயே மஞ்சள் கயிறில் அணிந்த தாலியை கழட்டகூடாது.

மஞ்சள் கயிறு அணிந்த தாலி திருமணமாகி ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்கு பிறகு மங்களகரமான நாளில் கழிட்டிவிட்டு தங்க செயினில் தாலியை மாற்றி அணிந்து கொள்வது வழக்கம். ஆனால் ஜனவரி இறுதிவரை தாலியை கழட்டி மாற்றுவதற்கான நல்ல நாள் இல்லை. எனவே அந்த நாள் வரை நான் மஞ்சள் கயிறுடன் தாலி அணிவேன்.

மஞ்சள் கயிறு தாலி ஹாட்டாக இருந்தது

சிலர் புரொமோஷனல் நிகழ்ச்சிக்கு வரும் மாடர்டன் உடைகளுடன் இதை அணிந்திருப்பது தேவையில்லை என கூறியதை கேள்விப்பட்டேன். ஆனால் மஞ்சள் கயிறுடன் கட்டப்பட்டிருக்கும் தாலி உங்களது மார்பை ஒட்டி இருக்க வேண்டும். இது மங்களகரமானது மட்டுமல்லாமல் சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. தாலியை தங்க செயினுடன் மாற்றிய பிறகு வெளியே தெரியாதவாறு இருக்கும். இருப்பினும் மாடர்ன் உடையுடன் மஞ்சள் கயிறு காம்பினேஷனின் என்னை பார்க்க மிகவும் ஹாட்டாக இருந்ததாக பலர் கூறியதை பார்த்தேன். இது மகிழ்ச்சி அளித்தது" என்றார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.