Keerthi Pandian:‘பா.ரஞ்சித் பேரு வந்தாலே அரசியல்..’ - கீர்த்தி பாண்டியன் ஓப்பன் டாக்!
இயக்குநர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்தப்படத்தை தயாரித்து இருக்கிறார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.

இயக்குநர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் புளூ ஸ்டார். இந்தப்படத்தில் நடிகர் அசோக்செல்வன் கீர்த்திபாண்டியன்,சாந்தனு, பிரித்வி, திவ்யாதுரைசாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான கோவிந்த் வசந்தா இசையமைத்து இருக்கிறார்.
இயக்குநர் பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்தப்படத்தை தயாரித்து இருக்கிறார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கீர்த்தி பாண்டியன், “இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது. அமர்ந்து பேசுவதற்குக் கூட இடம் கிடைக்காமல் நானும் இயக்குநர் ஜெயக்குமாரும் பைக்கில் 15 நிமிடத்திற்கும் மேல் அலைந்து திரிந்தோம்.
பின்னர் ஒரு இடத்தில் அமர்ந்து கதையை என்னிடம் இயக்குநர் விளக்கினார். கதை பிடித்திருந்த்தால் நான் நடிக்க சம்மதித்தேன். படத்தின் துவக்கத்தில் இருந்தே இயக்குநர் என்னிடம் இந்தக் கதாபாத்திரம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா.. ?? என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
ஆனால் எனக்கு இப்படத்தின் கதாபாத்திரங்கள் எல்லாமே பிடித்திருந்தது. இப்படத்தில் இயக்குநர் ரஞ்சித் இருக்கிறார் என்று தெரிந்ததுமே எல்லோருமே என்ன அரசியல் பேசத் துவங்கிவிட்டீர்களா..?? என்று கேட்கிறார்கள்.
நான் அவர்களை பார்த்து கேட்கிறேன். அரசியல் பேசினால் என்ன தவறு; நாம் உண்ணும் உணவு, உடை என்று ஒவ்வொன்றிலும் இன்று அரசியல் இருக்கிறது. நம் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது.
நாம் அரசியல் பேசாமல் தவிர்ப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று ஆகிவிடாது. இன்று மிகமிக முக்கியமான நாள் (ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை மறைமுகமாக குறிப்பிட்டு)
இன்று நாடு இருக்கின்ற சூழலைப் பார்க்கும் போது பாடலாசிரியர் அறிவு அவர்கள் பாடிய வரிகளின் படி, “ காலு மேல காலு போடு ராவணகுலமே ” என்று பாடத் தோன்றுகிறது. ” என்று பேசினார்.

டாபிக்ஸ்