Keerthi Pandian: ‘என்கிட்ட மட்டும் வெட்கம் வருமா?’.. 100 பேர் முன்னால் முத்தம்.. நெளிந்த அசோக்! - கீர்த்தி பாண்டியன்!
நான் பொதுவாக பொதுவெளியில் அசோக்குடன் கைகோர்ப்பது, நெருங்குவது உள்ளிட்டவற்றை மிகவும் இயல்பாக செய்வேன். ஆனால் அசோக் அப்படி இல்லை. பொதுவெளியில் அதனை தவிர்க்க முயல்வார். வெட்கப்படுவார்.
நடிகர் அசோக்செல்வனும், அருண்பாண்டியன் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனும், அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணம் திருநெல்வேலியில் அருண்பாண்டியனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வைத்து நடைபெற்றது. இவர்களது இருவரது நடிப்பில் வருகிற ஜனவரி 25ம் தேதி ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக இவர்கள் இருவரும் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கின்றனர்.அந்த பேட்டியில் பேசிய கீர்த்தி பாண்டியன் ப்ளூ ஸ்டார் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
அவர் பேசும் போது, “ நான் பொதுவாக பொதுவெளியில் அசோக்குடன் கைகோர்ப்பது, நெருங்குவது உள்ளிட்டவற்றை மிகவும் இயல்பாக செய்வேன். ஆனால் அசோக் அப்படி இல்லை. பொதுவெளியில் அதனை தவிர்க்க முயல்வார். வெட்கப்படுவார்.
ப்ளூ ஸ்டார் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 100 பேர் இருந்தார்கள். இயக்குநர் எங்கள் இருவரையும் அருகில் வந்து முத்தமிடுமாறு சொன்னார். உடனே நான்.. கிடைச்சது சான்ஸ்... என்று அவனை என் பக்கம் இழுத்தேன். முத்தம் கொடுத்தேன். ரொமன்ஸ் செய்தேன். இவன் என்னை அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான்.
உடனே நான் அசோக்கிடம் இப்போது உன்னால் என்ன செய்ய முடியும். 100 பேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றேன். ஆனால் இவன் ஒன்றும் செய்யாமுடியாமல் அப்படியே என்னை பார்த்துக்கொண்டிருந்தான். உடனே மற்ற படத்தில், மற்ற நடிகைகளுடன் நடிக்கும் போது மட்டும் வெட்கம் வராது. என்னுடன் நடிக்கும் போது மட்டும் வெட்கம் வருகிறதா?” என்று கேட்டேன். அவன் சிரித்தான்” என்று பேசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்