Keerthi Pandian: ‘சிறு பொழுது பிரிந்ததற்கே’… இடையில் வந்த பிரிவு.. பிரேக் அப் குறித்து பேசிய கீர்த்தி!
எங்களது காதல் வாழ்க்கையில் இடையில் 3 வருடங்கள் பிரேக் அப் வந்தது. இதனைத்தொடர்ந்து மீண்டும் நாங்கள் உட்கார்ந்து பேசும் போது, ஒருவரையொருவர் நாங்கள் எவ்வாறு மிஸ் செய்து கொண்டோம் என்பது குறித்து பேசினோம்.
நடிகர் அசோக்செல்வனும், அருண்பாண்டியன் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனும், அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமணம் திருநெல்வேலியில் அருண்பாண்டியனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வைத்து நடைபெற்றது. இவர்களது இருவரது நடிப்பில் வருகிற ஜனவரி 25ம் தேதி ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக இவர்கள் இருவரும் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கின்றனர். அந்த பேட்டியில் தனக்கும் அசோக்கிற்கும் இடையே நடந்த பிரேக் அப் பற்றி பேசினர்.
இது குறித்து கீர்த்தி பேசும் போது, " பிற படங்களில் இடம் பெற்ற காதல் பாடல்களை பார்க்கும் போதோ, கேட்கும் போதோ காதல் நினைவுகள் அலைமோதும். அந்த வகையில் எங்களது காதலை பற்றி நினைக்கும் போது, மெட்ராஸ் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆகாயம் தீப்பிடிச்சா பாடல் நினைவுக்கு வரும்.
எங்களது காதல் வாழ்க்கையில் இடையில் 3 வருடங்கள் பிரேக் அப் வந்தது. இதனைத்தொடர்ந்து மீண்டும் நாங்கள் உட்கார்ந்து பேசும் போது, ஒருவரையொருவர் நாங்கள் எவ்வாறு மிஸ் செய்து கொண்டோம் என்பது குறித்து பேசினோம்.
அதனை நினைவு படுத்தும் வகையில் அனேகன் படத்தில் இடம் பெற்ற ரோஜா கடலே பாடலில் வரும், சிறு பொழுது பிரிந்ததற்கே பல பொழுது கதறி விட்டார்… ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ’ என்ற வரிகளை அடிக்கடி அசோக்கிடம் பாடுவேன். இப்போது அதனை புரிந்து கொள்கிறார். அப்போது அவருக்கு புரியவில்லை” என்றார்.
டாபிக்ஸ்